Skip to main content

மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு!

Published on 25/01/2020 | Edited on 25/01/2020

இந்தியாவின் 71 வது குடியரசு தினம் நாடுமுழுவதும் நாளை கொண்டப்பட இருக்கிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். அந்த உரையில், கடந்த ஆண்டு இஸ்ரோ நிகழ்த்திய சாதனைகள் பெருமை அளிக்கக் கூடியதாக உள்ளன. தூய்மை இந்தியா திட்டம் அதிக மாற்றங்களை நாட்டில் கொண்டுவந்த திட்டமாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.

 

 Padma Awards Announced

 

மேலும் தற்போது மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தமிழகத்தைச் சேர்ந்த அமர்சேவா சங்கத்தின் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஜெகதீஷ் லால்  அவுஜாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக சேவகர் முகமது செரீஃப்க்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முகமது  செரீஃப் உறவினர்கள் இல்லாத 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்களுக்கு இறுதி சடங்குகளை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரின் உத்தரவு; ஒரு மணி நேரத்தில் ஓடோடி வந்த அதிகாரிகள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Padma Sri Chinnapillai's manai patta was searched for in an hour

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் மத்திய அரசின் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உறுதி அளித்தபடி தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை வீடு வழங்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சின்னப்பிள்ளைக்கு உடனடியாக வீடு வழங்க மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சின்னப்பிள்ளைக்கு புதிதாக வீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடு கட்டுமான பணியானது இந்த மாதமே தொடங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் அறிவித்த ஒரு மணி நேரத்திற்குள் மதுரை சின்னப்பிள்ளைக்கு ஒரு சென்ட் மனைக்கான  கூடுதல் பட்டா அவரைத் தேடிச்சென்று அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.

Next Story

வேதனையைப் பகிர்ந்த பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை; உத்தரவிட்ட தமிழக முதல்வர்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Padma Sri Chinnapillai who shared the anguish; Tamil Nadu Chief Minister assured

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் மத்திய அரசு சார்பில் தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை வீடு வழங்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்த செய்தியை கேள்விப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சின்னப்பிள்ளைக்கு உடனடியாக வீடு வழங்க மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சின்னப்பிள்ளைக்கு புதிதாக வீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடு கட்டுமான பணியானது இந்த மாதமே தொடங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார்.