
தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தல் படி தமிழகத்தின் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்க வைக்கப்படுவதுடன், அவர்களுடைய அரசு ஆவணங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
வரும் 11ம் தேதி தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.