Published on 23/02/2021 | Edited on 23/02/2021
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளை ஆதரித்து, ஸ்வீடனைச் சேர்ந்த பருவநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க், டூல்கிட் லிங்க் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டார். அந்த டூல்கிட்டை பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி, மும்பையைச் சேர்ந்த நிகிகா ஜேக்கப், அவரது கூட்டாளி ஷாந்தனு ஆகியோர் உருவாக்கியதாகக் குற்றம்சாட்டியது டெல்லி சைபர் கிரைம் போலீஸ்.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் திஷா ரவியை டெல்லி போலீஸார் கைது செய்து தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். கஸ்டடி முடிந்த நிலையில், நீதிமன்றக் காவலில் இருக்கும் அவர், ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், டெல்லி நீதிமன்றம் தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.