Published on 25/03/2021 | Edited on 25/03/2021
![hk](http://image.nakkheeran.in/cdn/farfuture/wnq0_Ysdzz4P6PPr_t7qyAERQAm_DoniD8nzoOjY8zA/1616686511/sites/default/files/inline-images/dfh_32.jpg)
இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும்பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி தொடங்கியது. முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்ட இத்தடுப்பூசி, மார்ச் ஒன்றாம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் செலுத்தப்பட்டு வந்தது.
இந்தநிலையில் 45 மேற்பட்ட அனைவருக்கும் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பூசி போட விருப்பம் உள்ளவர்களுக்கு வேகமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், முடிந்த அளவுக்கு அந்தப் பணிகள் விரைவுப்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.