கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் பவன் கல்யாண் ரூபாய் 2 கோடி நிதியுதவி அளித்தார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 606 லிருந்து 657 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடியும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம் நிதியுதவியை அளிப்பதாக அறிவித்துள்ளார்.