Skip to main content

பாலியல் புகார்களை கட்டுப்படுத்த சுந்தர் பிச்சை அதிரடி...

Published on 09/11/2018 | Edited on 09/11/2018

 

கூகுள் நிறுவனத்தில் பாலியல் புகார்கள் அதிகரித்துகொண்டே வருகிறது. இதுவரை 48 பேரை பணியிலிருந்து நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம். அதில் 13 பேர் மூத்த அதிகாரிகள் ஆகும். இந்த பாலியல் புகார்களை சரியாக கையாள வேண்டும் என்றும், பெண்களுக்கு பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் கூகுள் நிறுவனத்தில் 2000 பேர் கூகுள் வாக்கவுட் என்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 

இதையடுத்து பாலியல் தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாலியல் தொடர்பான புகார்களை கண்காணிக்க கலிபோர்னியா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நகரங்களில் 20,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்