Skip to main content

ஒரே மேடையில் விவாதற்கு தயாரா? அதிமுக அமைச்சருக்கு தங்க. தமிழ்செல்வன் சவால்

Published on 17/10/2018 | Edited on 17/10/2018
Thanga Tamil Selvan



கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 110-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விருத்தாசலம் சட்டமண்ற உறுப்பினர் கலைச்செல்வன் தலைமை தாங்க, சிறப்பு விருந்தினராக அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டார்.
 

அக்கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ கலைச்செல்வன், "தொழில்துறை அமைச்சரான எம்.சி.சம்பத் கேட்கும் கமிஷன் தொகையால், தமிழகத்தில் சுமார் 50000 பேருக்கு மேல், தொழில்துறையில் இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் எவ்வித நலத்திட்டங்களையும் செய்யாமல், ஊழல் செய்து வரும் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஒரே மேடையில் விவாதற்கு தயாரா?" என்று சாவல் விட்டார். 
 

பின்னர் பேசிய தங்க.தமிழ்செல்வன் "18 எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் நாள் தான் தமிழகத்தில் தீபாவளி. திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைதேர்தலை நிறுத்துவதற்காக தான், பாஜகவின் துணையோடு,  வானிலை ஆராய்ச்சி மையத்தையே பொய் சொல்ல சொல்லி 'ரெட் அலர்ட்' என்று பொதுமக்களை அச்சுறுத்தியது கைக்கூலி எடப்பாடி அரசு. 
 

பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து இந்தியா முழவதும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் போராட்டம் நடக்காதற்கு காரணம் மத்திய அரசுக்கு கைக்கூலியாக செயல்படும் எடப்பாடி அரசே ஆகும் " என்றார். 
 

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " 18 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பானது எங்களுக்கு சாதகமாக வரும், தீர்ப்பு வந்ததும் அதிமுகவை கைப்பற்றி 47 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடுவோம். ஸ்டெர்லைட், மீத்தேன், பெட்ரோல், டீசல், நீட் தேர்வு உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்த, முறைப்படுத்த துப்பில்லாத அரசாக செயல்படும் எடப்பாடி அரசானது, பாஜகவின் பினாமி அரசு" என்று கூறினார்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்