Skip to main content

"காங்கிரஸூக்கு ஓட்டே இல்லை" - துரைமுருகன் தடாலடி!

Published on 15/01/2020 | Edited on 15/01/2020

திமுக-காங்கிரஸ் கட்சிகளிடையே ஏற்பட்ட உரசல் விரிவடைந்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் எங்களுக்கு என்ன நஷ்டம்?, அவர்களுக்கு ஓட்டே இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

 

DMK duraimurugan-about-congress party

 

உள்ளாட்சி தேர்தலில் சீட் ஒதுக்கீடு விவகாரத்தில் ஏற்பட்ட அதிர்ப்தியால் திமுகவை விமர்சித்திருந்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி. இதனால் திமுக தரப்பில் இருந்து காங்கிரஸ் மீது புகைமூட்டம் கிளம்பியது. மேலும் அந்த அறிக்கை இரு கட்சிகளுக்கும் இடையேயான இடைவெளியை அதிகப்படுத்தியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கே.எஸ்.அழகிரி, திமுக தலைமையை சமாதானப்படுத்தும் விதமாக மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

 



இருப்பினும் பாஜகவின் தேசிய குடியுரிமை சட்டத்துக்கும், குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கும் எதிராக  சோனியா தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டு ஆலோசனைக் கூட்டத்தை திமுக புறக்கணித்தது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, " திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் கவலை இல்லை. அவர்கள் விலகுவதால் எங்களுக்கு என்ன நஷ்டம்?. காங்கிரஸ் விலகினாலும் கூட அது எங்கள் வாக்கு வங்கியை பாதிக்காது. அவர்களுக்கு ஓட்டே இல்லை" என தெரிவித்தார்.    

சார்ந்த செய்திகள்