Skip to main content

“குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி” அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின் முழு விவரம்

Published on 18/12/2019 | Edited on 18/12/2019


 
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து தி.மு.க. சார்பில் நேற்று மாவட்டம் தோறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணிக் கட்சிகள் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தில் 23.12.2019 திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னையில்  “குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி”  நடத்திடுவது என தீர்மானிக்கப்பட்டது.

 

dmk all party meeting



இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அந்த தீர்மானத்தில், மத்திய பா.ஜ.க. அரசின் கடந்த ஆறு ஆண்டுகால ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்டு வரும்  தவறான பொருளாதாரக் கொள்கைகளால்,  இந்தியா கடுமையான பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. வேலைவாய்ப்பின்மையின் சதவிகிதம் கூடிக்கொண்டே போகிறது. தொழில்துறையின் வளர்ச்சி தேக்க நிலையில் இருக்கிறது. நாட்டின் உயிரோட்டமான வேளாண்மைக்கு ஊக்கமின்றியும், விளை பொருள்களுக்கு உரிய விலை இன்றியும் ஒளி இழந்திருக்கிறது. விலைவாசி விண்ணைத் தொடும் அளவு உயர்ந்து கொண்டே செல்கிறது. ஏழை எளிய நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே போகிறது.  பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்கின்றன. நாட்டில் அடித்தட்டு மக்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை மிகக் கடுமையான, முன்னெப்போதும் கண்டிராத அளவிலான பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் திணிக்கப்பட்டுள்ள சூழலில்; அனைத்தையும் ஆக்கபூர்வமான சிந்தனையாலும் நடவடிக்கையாலும் சரி செய்ய வேண்டிய பணியைத் தவிர்த்துவிட்டு, நாட்டின் முக்கியப் பிரச்சினைகளிலிருந்து, மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும், ஆர்.எஸ்.எஸ். வகுத்தளித்துள்ள மதரீதியான அடிப்படைவாதக் கொள்கைக்குச்  செயல்வடிவம் கொடுக்கும் வகையிலும், குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-ஐ கடந்த 9-12-2019 அன்று மக்களவையிலும், 11-12-2019 அன்று மாநிலங்களவையிலும், பிரதமர்  நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றி உள்ளது. இது அரசியலமைப்புச் சட்டம் கூறும் மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கை ஆகும். 1955ஆம் ஆண்டே இந்தியாவுக்கான குடியுரிமைச் சட்டம் தெளிவாக நிறைவேற்றப்பட்டு, 60 ஆண்டுகளுக்கும் மேலாக  எந்தவிதப் பிரச்சினையுமின்றி நிலவி வந்த அமைதிக்கு, இப்போது குந்தகம் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. மக்களவையில் தங்களுக்குள்ள பெரும்பான்மை பலத்தை மக்கள் வாழ்வு மேம்பாட்டுக்கும், நாட்டு முன்னேற்றத்திற்கும் பயன்படுத்துவதை விடுத்து, மத்திய பாஜக அரசு, பிற்போக்கான காரியங்களிலேயே கவனம் செலுத்துகிறது.  மதவாதக்  கண்ணோட்டத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் அவற்றுள் ஒன்று. இந்த சட்டத் திருத்தத்தால் முஸ்லிம் சிறுபான்மை மக்களும், ஈழத்தமிழர்களும் குடியுரிமை பெற இயலாமல், பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.   ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து, முத்தலாக் தடைச் சட்டம் - அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து, காஷ்மீரில் ஜனநாயக குரல்வளையை நெரித்தல் - தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் என தொடர்ச்சியாக, சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தின்மீது தாக்குதல் நடத்தி வருகிறது மத்திய பா.ஜ.க.  அரசு.
 

இந்தத் திருத்தச் சட்டத்தில் புதைந்திருக்கும் ஆபத்தை உணர்ந்து, இந்தியாவில் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல் சக்திகள் அனைத்தும்,  நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், அதனை நிராகரித்து, தங்கள் கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்தன. ஏகோபித்த இந்த எதிர்ப்பை பா.ஜ.க. அரசு துளியும் மதிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் அடுத்த கட்டமாக, ஜனநாயக வழியிலான போராட்டங்களை முன்னெடுத்து  வருகின்றன. அகில இந்திய அளவில் மாணவர் சமுதாயம்  எதிர்ப்புக்குரலை எழுப்பி வருகிறது. இயல்பாக எழும் மாற்றுக் குரலைச் சகித்துக் கொள்ளும் தன்மையை மத்திய அரசு  இழந்து விட்டது. டெல்லி ஜாமியா - உத்திரபிரதேச அலிகார் பல்கலைக் கழகங்களில் போராடிய மாணவ - மாணவியர் மீது காவல்துறையினரும், காக்கி சீருடையில் அழைத்து வரப்பட்ட சமூக விரோதக் கும்பலும் கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டதைக் கண்டு நாடே பதறுகிறது. மாணவர்களை ரத்த வெள்ளத்தில் தள்ளி, அதன்பிறகும் கடுமையான தாக்குதல் நடத்திய  காவல்துறைக்கும், ஏவிவிட்ட மத்திய அரசுக்கும் அனைத்து கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. நாடு முழுவதும் தன்னெழுச்சியாக நடைபெறும் மாணவர்களின் அறவழிப் போராட்டங்களுக்கு ஆதரவளிப்ப தென்றும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட சில மாநில முதலமைச்சர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு வெளிப்படையான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர். கேரளாவில் ஆளுங்கட்சியின் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றாகப் பங்கேற்ற குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டம், இந்நாட்டில் பாசிச சக்திக்கெதிராக ஜனநாயக சக்திகள்  ஓர் அணியில் சேர வேண்டிய தேவையையும் அவசர - அவசியத்தையும் வலியுறுத்தும் முற்போக்கு அடையாளமாக  அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.
 

“எம்மதமும் சம்மதமே”, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற உயர்ந்த சிந்தனைகளின் சிறப்புக் கருவூலமான  தமிழ்நாட்டில்; வாழ்ந்துவரும் தொப்புள் கொடி உறவுகளான ஒரு இலட்சம் ஈழத்தமிழர்களின் உரிமை செறிந்த எதிர்காலத்தையும், நாடு முழுவதும் இருக்கும் முஸ்லிம் மக்களின் அமைதியான வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது குடியுரிமை திருத்தச் சட்டம். பாகிஸ்தான்-பங்களாதேஷ்-ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்களைத் தவிர்த்து, இந்துக்கள் உள்ளிட்ட பிற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் இந்த திருத்தச் சட்டம், இலங்கையிலிருந்து குடியேறியுள்ள ஈழத்தமிழர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதென்பது, பா.ஜ.க அரசின் மதவாதம் மட்டுமல்ல, அப்பட்டமான தமிழின விரோதப் போக்குமாகும்.

 

தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்ற ஈழத்தமிழர்களைப் பாதிக்கும் இந்த திருத்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டிய நிலையில், அதனை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்து நிறைவேற ஒத்துழைத்திருப்பது, ஈழத்தமிழர்களுக்கு செய்திருக்கும் பச்சைத் துரோகம் என்பதை சரித்திரம் மறக்காது, மன்னிக்காது. மாநிலங்களவையில் இந்த சட்டமசோதா நிறைவேறுவதற்கு அ.தி.மு.க.வின் 11 உறுப்பினர்களும், பா.ம.க.வின் ஒரு உறுப்பினரும் அளித்த வாக்குகள்தான்  காரணம் என்கிறபோது, பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக அடிமை அ.தி.மு.க. கூட்டணி செயல்பட்டு வருவது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்திலிருந்து  துணைச் செயலாளர் ஒருவர் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்டு, இந்த சட்ட மசோதாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதால் அதன்படி வாக்களித்தோம் என மாநிலங்களவை அ.தி.மு.க உறுப்பினரான திரு.எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்திருப்பதிலிருந்து, அ.தி.மு.க எப்படி ஆட்டி வைக்கப்பட்டு வருகிறது, அதிமுகவும் மனமுவந்து எப்படியெல்லாம்,  தலையாட்டி வருகிறது  என்பது தெளிவாகத் தெரிகிறது.


 

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவின் அமைதி சீர்குலைந்து, மத நல்லிணக்கம் சிதைந்து,  பயமும் பதற்றமும் அதிகரித்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களிலும் தலைநகர் டெல்லியிலும் இன்னும் பல பகுதிகளிலும், மக்களின் அச்ச உணர்வு, போராட்டமாக மாறியுள்ளது. அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெறவிருந்த இந்திய பிரதமர் மோடி - ஜப்பான் பிரதமர் அபே சந்திப்பு ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்தியா வரவிருந்த வங்கதேச அமைச்சரும் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார். இந்த சட்ட மசோதாவைக் கொண்டு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தனது அருணாசலப்பிரதேசம், மேகாலயா மாநிலங்களுக்கான பயணங்களை ரத்து செய்திருக்கிறார். பல நாடுகள் தங்கள் குடிமக்களை இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளன. உலகளாவிய அமைப்புகள் பலவும் மற்றும் 1067க்கு மேற்பட்ட உலகப் புகழ் பெற்ற அறிவியலாளர்களும்,  இந்த மதவாத சட்டத் திருத்தத்திற்கு கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளனர்.

வேற்றுமையில் ஒற்றுமை என்கிற இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாழ்படுத்திடும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டமும், அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. அரசு மேற்கொள்ளவிருக்கும் குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானதும், சொந்த மண்ணிலே வாழும் சகோதரர்களை அகதிகளாக்கி, அவர்களை அந்நியப்படுத்திக்  கொடுமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளுமாகும்.
 

ஏற்கனவே அசாமில் நடத்தப்பட்ட குடிமக்கள் பதிவேட்டுக்கான பதிவில், கார்கில் போர் வீரரையே அந்நியராகப் பதிவு செய்து கைது செய்த கொடுமைகள் நடந்துள்ளன. முஸ்லிம்கள் மட்டுமின்றி, பல லட்சம் இந்து மக்களும் அசாமில் எதிர்காலம் தெரியாமல் தத்தளிக்கின்றனர்.


 

இந்நிலையில், மதவாத மற்றும் இனவாதக் கண்ணோட்டத்துடனும், ஈழத்தமிழர்களைப் புறக்கணித்திடும் வகையிலும் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை இந்த அனைத்துக் கட்சிக்கூட்டம் கடுமையாகக் கண்டிப்பதுடன், நாட்டில் முதலில் “அமைதி நிலவ வேண்டும்” என்ற நல்லெண்ணத்துடன், அதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.
 

குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்து நாட்டின் அமைதியைச் சீர்குலைத்து வரும் மத்திய பா.ஜ.க அரசுக்கும், அதன் திட்டத்தின்படியே  செயல்பட்டு, ஈழத்தமிழர்களுக்கும் - சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் துரோகம் இழைத்த மாநில அ.தி.மு.க. அரசுக்கும் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில்,  23.12.2019 திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னையில்  “குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி”  நடத்திடுவது என அனைத்து கட்சிகளின் இந்தக் கூட்டம்  ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.