Published on 21/04/2022 | Edited on 21/04/2022
இந்தியாவில் கடந்த இரு மாதங்களாக கட்டுக்குள் இருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரண்டாயிரத்திற்கும் கீழாக பதிவாகி வந்த தினசரி கரோனா பாதிப்பு, தற்போது இரண்டாயிரத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா பரவலின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் காரோனா நான்காம் அலைக்கு வாய்ப்பில்லை என இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைமை விஞ்ஞானி கங்கா கேத்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒமைக்ரான் மாறுபாட்டின் துணை திரிபுகள் காணப்பட்டாலும் புதிய திரிபுகள் எதுவும் இல்லை என்பதால் கரோனா நான்காம் அலைக்கு வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.