Skip to main content

"இதில் கலைஞர் அய்யா பெயரும், ஸ்டாலின் அங்கிள் பெயரும் இடம்பெற வேண்டும்" - நடிகர் விஷால்

Published on 25/07/2022 | Edited on 25/07/2022

 

vishal said Karunanidhi and Stalin name should be placed Actors Association building

 

அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் லத்தி படத்தில் நடித்துள்ளார். 'ராணா ப்ரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையொட்டி இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் விஷால், சுனைனா உள்ளிட்ட படக்குழுவினருடன் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 

 

இவ்விழாவில் பேசிய விஷால், "நானும் உதயநிதியும் சின்ன வயசுல இருந்தே நல்ல நண்பர்கள், ஸ்கூல், காலேஜ் ஒன்னாதான் படிச்சோம். ஒன்னாதான் விளையாடுவோம். ரமணாவும், நந்தாவும் முதல் தடவையா இந்த படத்தை தயாரிப்பதால் உதயநிதியை வைத்து டீசர் மட்டும் வெளியிட சொல்லிருந்தேன் அதே போல அவனும் வந்து டீசரை ரிலீஸ் செய்து கொடுத்திருக்கான், ரொம்ப நன்றி உதய்.

தேர்தலுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே உதயநிதி கிட்ட  நடிகர் சங்க கட்டிடத்தில் கலைஞர் அய்யா பெயரும், ஸ்டாலின் அங்கிள் பெயரும் இடம் பெறணுங்கிறது என்னோட ஆசைன்னு சொன்னேன். இதை உதய் என் நண்பன் என்பதால் சொல்லல, உண்மையாவே சொல்றேன். ஏனென்றால் ஒரு வரலாற்று கட்டிடத்தில் வரலாற்று பெயர்கள் இடம் பெற வேண்டும் . இது என்னுடைய ஆசை மட்டும் அல்ல, நடிகர் சங்கத்தினரின் ஆசையும் கூட. அது கூடிய விரைவில் நிறைவேறப் போவதால் எனக்கு சந்தோசமாக இருக்கிறது" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த தெலுங்கானா முதல்வர்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Telangana Congress Chief Minister says Udhayanidhi Stalin must be punished

சென்னையில், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இது தொடர்பாக, வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே, மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. 

அதன்படி, சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துகள் தவறானது என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி தெலுங்கானா மாநிலத்தில், அம்முதல்வர் ரேவந்த் ரெட்டி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் கூறிய கருத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கள் தவறானது. அது அவருடைய சிந்தனை. சனாதனம் குறித்து அவருடைய கருத்திற்காக அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஆபாச வசனம் - விஜய்யைத் தொடர்ந்து விஷால்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
vishal rathnam trailer released

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு டிசம்பர் 1 அன்று வெளியானது. பின்பு கடந்த மார்ச் 3, படத்தின் முதல் பாடலான ‘டோன்ட் ஓரி டோன்ட் ஒரிடா மச்சி’ பாடல் வெளியானது. அடுத்ததாக ‘எதனால’ பாடல் கடந்த மார்ச் 29ஆம் தேதி வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து ரிலீஸ் தேதி நெருங்கி விட்டதால் பிரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது.  அந்த வகையில் ரத்னம் படம் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வருகிறது.  

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லையோர பகுதியில் நடக்கும் கதைக்களத்தைக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. பிரியா பவானி ஷங்கருக்கு ஒரு ஆபத்து வருகிறது. அவரை காப்பாற்ற விஷால் முயற்சி எடுக்கிறார். எதனால் பிரியா பவானிக்கு பிரச்சனை வந்தது. விஷால் அவரை காப்பாற்றினாரா இல்லையா, விஷாலுக்கும் பிரியா பவானி ஷங்கருக்கும் என்ன தொடர்பு? ஆகியவற்றை விரிவாக விவரிக்கும் வகையில் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது. மேலும் விஷால், சமுத்திரக்கனி, கௌதம் மேனன் ஆக்ரோஷமாக சர்ச்சைக்குரிய வசனங்களை பேசுகின்றனர்.
 
இந்த ட்ரைலரில் விஷால் பேசிய அதே வசனத்தை, கடந்த ஆண்டு வெளியான லியோ பட ட்ரைலரில் விஜய் பேசினார். அப்போது அந்த வசனத்திற்கு பெரும் சர்ச்சை கிளம்ப, பின்பு அதை திரையரங்குகளில் மியூட் செய்யப்பட்டது. இந்தச் சூழலில் விஷாலும் அதே வசனத்தை பேசியிருப்பது, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.