Skip to main content

சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்ற ஹாங் ஹாங் அணியின் ஆட்டம். 

Published on 19/09/2018 | Edited on 19/09/2018

ஆசிய கோப்பையின் தனது முதல் போட்டியில் இந்திய அணி, குட்டி அணியாக கருதப்பட்ட ஹாங் ஹாங் அணியுடன் மோதியது. எளிதாக வெற்றி பெரும் என்று எதிர்பார்த்திருந்த இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்க்கு 285 ரன்களை எடுத்தது. துவக்க ஆட்டக்காரர் தவான் அதிரடியாக விளையாடி 120 பந்துகளில் 127 ரன்களை குவித்தார். அம்பதி ராயுடு 60 ரன்கள் எடுத்தார். நல்ல தொடக்கத்தை பயன்படுத்தி 350 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர் ரசிகர்கள். வழக்கம்போல மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்ப, ஹாங் ஹாங் வீரர்கள் சிறப்பாக பந்து வீச 285 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்தியா அணி.

இந்திய அணியை பொறுத்தவரை அனுபவம் மிகுந்த புவனேஸ்வர் குமார், சிறந்த சுழல் பந்து வீச்சு இணை என பந்து வீச தொடங்கியது. ஹாங் ஹாங் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை திறமையாக எதிர்கொண்டு கிரிக்கெட் ரசிகர்களின் பலத்த ஆதரவை பெற்றனர். முதல் விக்கெட்டிற்கு 174 ரன்கள் குவித்தனர். இறுதி வரை போராடிய ஹாங் ஹாங் அணி, 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது. குட்டி அணியான ஹாங் ஹாங்கின் இந்த போராட்டகுணம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

vvs

 

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் ஒருவரான வி.வி.எஸ்.லக்ஸ்மன் ஹாங் ஹாங் அணியின் உறுதியான வெளிபாடு மிகவும் பாராட்டத்தக்கது என தெரிவித்துள்ளார். மேலும், ஷிகர் தவானின் ஆட்டம் சிறந்த இன்னிங்க்ஸ் எனவும், ராயுடு மற்றும் கலீல் அஹமது ஆகியோரின் செயல்பாடு மிகவும் நன்றாக இருந்தது என்றும்  ட்வீட் செய்துள்ளார். 
 

fs

 

பைசன் லஹாணி: ஹாங் ஹாங் அணி நன்றாக விளையாடியது. இன்று எங்களின் மனங்களை வெற்றி கொண்டது ஹாங் ஹாங். இந்திய அணியை தோல்வியின் விளிம்பிற்கு கொண்டு சென்றது. இரு அணிகளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் அனுபவம் மட்டுமே. 
 

deep


தீப் தாஸ்குப்தா: நிசகட் மற்றும் அன்ஷுமன் ஆகியோரின் பேட்டிங் முதிர்ச்சியானது. போட்டியின் முடிவை காட்டிலும், ஹாங் ஹாங் அணியின் சிறப்பான ஆட்டம் உலக கிரிக்கெட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. 
 

naraay


தீபு நாராயணன்: தொடக்க ஆட்டம் சிறப்பாக இருந்தும் தோல்வியை சந்தித்த இரண்டாவது தொடக்க இணை.

 

sww


ஸ்வப்னில்: வலுவில்லாத அணியிடம் தோனி டக் அவுட் ஆனது ஓகே தான். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி டெஸ்ட் இன்னிங்க்ஸ் ஆட வேண்டாம்.

 

viru


நிக்ஹில் வீரு: தோனிக்கு வலை பயிற்சியில் ஆர்வம் இல்லை. எனவே அவர் தனது எனெர்ஜியை பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கிய பெரிய ஆட்டத்திற்காக சேமித்து வைத்துள்ளார்.