இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஒருபோதும் திருப்தி அடைந்துவிடக்கூடாது என முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் அறிவுரை கூறியுள்ளார்.
இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் அளித்துள்ள பேட்டியில், ‘இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இப்போது போலவே தனது பணியை சிறப்பாக தொடர வேண்டும் என்பது என் விருப்பம். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, முன்வைக்கப்படும் விமர்சனங்கள் என எதைப் பற்றியும் கவலைப்படாமல், அவர் தான் என்ன சாதிக்க விரும்புகிறாரோ அதை நோக்கி மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தவேண்டும். இதயம் உங்களை அதைநோக்கி வழிநடத்தட்டும்.
கிரிக்கெட்டில் எத்தனை ரன்கள் எடுத்தாலும் போதாது. அதைப்போலவே விராட் கோலி நிறைய ரன்கள் குவிக்கவேண்டும் என்ற வேட்கையுடன் விளையாடி வருகிறார். அதுதான், தொடர்ந்து அவர் சிறப்பாக விளையாடி வருவதற்குக் காரணம். ஆனால், மனநிறைவு அடைந்துவிட்டால் ரன்குவிப்பு தளர்ந்துவிடும். அந்த நிலைக்கு வந்துவிடக்கூடாது. பந்துவீச்சாளர்களால் 10 விக்கெட்டுகளைத்தான் வீழ்த்த முடியும். ஆனால், பேட்ஸ்மென்கள் எத்தனை ரன்கள் வேண்டுமானாலும் குவிக்கலாம். அதனால், கோலி ஒருபோதும் திருப்தி அடைந்துவிடாமல், தொடர்ந்து மகிழ்ச்சியாக இருந்து மகிழ்ச்சிப் படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.