சர்க்கரை நோய் குறித்த பல்வேறு தகவல்களை ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
உலகில் சர்க்கரை நோய்க்கான தலைநகரமாக இன்று இந்தியா விளங்குகிறது. சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு நாம் உண்ணும் உணவு தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதைவிட மன அழுத்தம் தான் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணம். நடைப்பயிற்சி என்பது மிக மிக முக்கியம். அதன் முக்கியத்துவம் காரணமாகவே அந்தக் காலத்தில் மன்னர்கள் நடந்தே நகர்வலம் சென்றனர். சர்க்கரை என்பது ஒரு குறைபாடு தானே தவிர நோய் அல்ல. இதைச் சரிசெய்வதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன.
தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடக்க வேண்டும். இதன் மூலம் ஒரு புத்துணர்வு கிடைக்கும். ரத்த ஓட்டம் சீராகும். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். உடலில் எனர்ஜி கூடும். கொழுப்பின் அளவு குறையும். அனைவரும் பிராணயாமம் செய்ய வேண்டும். வாரத்தில் மூன்று நாட்கள் கோவக்காய் சாப்பிட வேண்டும். நெல்லிக்காய், மஞ்சள், சீரகம் ஆகியவற்றை சேர்த்து கஷாயமாகப் பருகினால் சர்க்கரை அளவு குறையும். ஆவாரம் பூவை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிர்தல் பிரச்சனை தீரும்.
இப்போது நாம் உணவில் அதிகமாக நெய்யை சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் நெய் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. முருங்கைக் கீரையில் பேராற்றல் உண்டு. ஆனால் இப்போது பலரும் அதைச் சாப்பிடுவதில்லை. தொடர்ச்சியாக முருங்கைக் கீரை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றிலிருந்து நாம் வெளிவர வேண்டும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவை இதற்கு மிகவும் அவசியம். மருந்து மாத்திரைகளையும் மீறி, மன அழுத்தத்தை நாம் குறைத்தால் தான் சர்க்கரையின் அளவு குறையும். மூச்சுப் பயிற்சி இதற்கு மிகவும் உதவும்.