Skip to main content

பருத்திச் செடியில் செம்மறி ஆடுகள்! உடையின் கதை #5

Published on 04/07/2018 | Edited on 16/07/2018
udaiyin kadhai 5

பருத்தி உடைக்கு சொந்தக்காரர்கள் இந்தியர்கள். கி.மு.3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பருத்தியிலிருந்து நூல் நூற்க கற்றுக் கொண்டார்கள். பருத்தியை விவசாயம் செய்து பெருமளவு உற்பத்தி செய்யத் தொடங்கினர். அன்றைய காலகட்டத்தில் மிகவும்  லேசான துணி பருத்தித் துணிதான்.

சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த திராவிடர்கள் பருத்தி ஆடை தயாரிப்பில் பெயர் பெற்றிருந்தனர். ஆனால், அவர்கள் அணிந்த ஆடைகள் எதுவும் கிடைக்கவில்லை. அதே சமயம், அவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட சிலைகள் உள்ளிட்ட முத்திரைகளில் உடைகள் அணிந்த உருவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஹரப்பா நாகரிகத்தில் உடைகள் அணியாத உருவங்கள்தான் இருந்தன. சிந்துசமவெளி நாகரிகத்தில் இடுப்பில் வேஷ்டி அணிந்த ஆண்களும், முழங்கால்வரை உடை அணிந்த பெண்களும் இருந்தனர். மார்புப்பகுதியை இரு தரப்பினரும் மூடவில்லை. பருத்தி, சணல், கம்பளி, லினன், தோல் ஆகியவற்றை பயன்படுத்தி உடைகள் தயாரிக்கப்பட்டன. உடைகளுக்கு வண்ணச்சாயம் பூசியதற்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆணும் பெண்ணும் கழுத்து, கைகள், காது, கணுக்கால், விரல்களுக்கு நகைகள் அணியும் பழக்கம் நடைமுறையில் இருந்தது. இந்த நகைகள் தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்ட உலோகங்களால் செய்யப்பட்டிருந்தன. பளபளா கற்களையும் நகைகளில் பயன்படுத்தினர். ஆண்களும் பெண்களும் கூந்தலை விதவிதமாக பின்னலிடுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். ஆண்கள் தாடியை டிரிம் செய்திருந்தனர்.

harappan cultureவேத காலத்தில் அதாவது கி.மு.1500 முதல் கி.மு.500 வரையிலான காலத்தில் பருத்தியால் நெய்யப்பட்ட வேஷ்டி போன்ற நீளமான செவ்வக துணியை பருத்தியிலிருந்து உருவாக்கினர். ஆணும் பெண்ணும் நீளமான ஒரே துணியை உடல்முழுவதும் சுற்றும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. இந்தியர்களுக்கு   முன்பே   தென்னமெரிக்காவின்   பெரு   நாட்டிலும், எகிப்திலும்  பருத்தியின் பயன்பாட்டை அறிந்திருந்ததாக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.மெக்ஸிகோவின் குகை ஒன்றில் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பருத்திஆடையின் மிச்சங்கள் கிடைத்துள்ளன.

ஆனால், இந்தியர்கள்தான் பருத்தியை திறமையாக பயன்படுத்தினர். ரிக்வேதத்திலேயே பருத்தி ஆடை பற்றிய குறிப்புகள் வருகின்றன. கி.மு. 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்தில் வாழ்ந்த வரலாற்றாளர்ஹெரடோடஸ். இவர் இந்திய பருத்தி பற்றி தனது நூலில்...

“இந்தியாவில், செம்மறி ஆடுகளில் கிடைப்பதைக் காட்டிலும் தரமான கம்பளி கிடைக்கிறது. காடுகளில் வளரும் இந்த மரக் கம்பளிகளில் இருந்து பெறும்இழைகளைப் பயன்படுத்தி இந்தியர்கள் தரமான ஆடைகளை தயாரிக்கின்றனர்” என்று எழுதியிருக்கிறார்.

ஹெரடோடஸ் இப்படி எழுதியதற்கு, கம்பளியைத் தவிர கிரேக்கர்கள் வேறுஇழைகள் எதையும் அறிந்திருக்கவில்லை என்பதே காரணம். அப்போது மட்டுமல்ல கி.மு. 1350 ஆம் ஆண்டுவரை கூட அவர்கள் பருத்திச்செடியைப் பற்றி அறிந்திருக்கவில்லை. பருத்தி ஆடைகள் கிரேக்கத்திற்குஇறக்குமதி செய்யப்பட்ட நிலையிலும், பருத்தி மரம் சிறு சிறு செம்மறிஆடுகளுடன் இருப்பதாகவே மாண்டேவில் என்பவர் எழுதியிருக்கிறார்.

gupta culture

“கிளை நுனியில் இருக்கும் சிறு சிறு செம்மறி ஆடுகளுக்கு பசி எடுக்கும்போது, கிளைகள் வளைந்து அவற்றை தரையில் மேயவிட்டதாக” அவர் எழுதியிருக்கிறார்.

வேதகாலத்தில், பரிதானா என்ற இடுப்பு இடுப்புக்கு கீழான உடையையும், மேல் துண்டு ஒன்றையும் மக்கள் பயன்படுத்தினார்கள். மேல் துண்டை கோடைக் காலத்தில் அணியமாட்டார்கள். ஆனால், கீழ்சாதியினர் எனப்பட்டவர்கள் கோவணம் மட்டுமே அணிய அனுமதி இருந்தது. உடைகள் சமூக அந்தஸ்த்தை குறிப்பனவாக கருதப்பட்டன.

கி.மு.322 முதல் 185 வரையிலான மவுரியர்கள் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கான உடைகளின் மாதிரி யக்‌ஷி என்ற சிலை வடிவங்களில் இருந்து கிடைக்கிறது. அன்றைய காலகட்டத்தில் இடுப்புக்கு கீழான உடைகளையே அணிந்திருந்தனர். இடுப்பில் ஒரு கயிறால் கட்டும் வகையில் அந்த உடைகள் இருந்தன. அதாவது பாவாடை மாதிரியாக இருந்தன. மேலுடையாக நீளமான துண்டை பயன்படுத்தினார்கள். அந்த மேலாடை ஒருபக்க தோள்பட்டை வழியாகவோ, இருபக்க தோள்பட்டைகள் வழியாகவோ அணிந்திருப்பார்கள். நகைகளையும் வித்தியாசமான வடிவங்களில் செய்து பயன்படுத்தினார்கள்.

கி.பி.320 முதல் 550 ஆண்டுகளுக்கு இடையிலான குப்தர்கள் காலத்தில் தைக்கப்பட்ட உடைகள் புழக்கத்திற்கு வந்தன. சமூக அந்தஸ்த்துக்கு அடையாளமாக இந்த உடைகள் இருந்தன. அதேசமயம், தைக்காத உடைகளை பயன்படுத்தும் பழக்கமும் நடைமுறையில் இருந்தது.

பெண்கள் ஒரே துணியை பல அடுக்குகளாக மடித்து இடுப்பில் கட்டி, ஒரு முனையை தோள்பட்டையில் போட்டுக்கொள்ளும் வழக்கம் இருந்தது. நடனமாதுகள் வித்தியாசமான உடையை அணிந்தார்கள். மன்னர்கள் இடுப்பில் மட்டுமே உடை அணிந்தனர். மார்புகளில் அகன்ற நகைகளையும், கைகளிலும் கால்களிலும் காப்புகளையும் அணிந்தனர். ஆண்கள் நீளமான கூந்தலை வளர்த்து, அவற்றை வளையங்களை பயன்படுத்தி சுருள் சுருளாக்கினர். பெண்களும் தங்கள் கூந்தலை பூக்கள் மற்றும் அழகிய வளையங்களால் அலங்கரித்தனர்.

இந்தியர்கள் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் நூற்பு சக்கரத்தை கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து ஆடை நெசவுத்தொழில் வளர்ச்சி பெற்றது. இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் ரோமப் பேரரசு வரை பருத்தி ஆடை வர்த்தகம் நடைபெற்றது.முகலாயர்கள் காலத்தில்தான் ஆடம்பரமான உடைகள் அறிமுகமாகின. மஸ்லின் என்ற மெல்லிய துணிகளும், பட்டு, வெல்வெட், ப்ரொகேட்ஸ் ஆகிய வழுவழுப்பான துணிகளும் பயன்பாட்டுக்கு வந்தன.

mugalமுகலாயர்களில் ஆண்களும் பெண்களும் பின்னல் வேலைகளுடனும், முத்துக்களை கோர்த்தும் உடைகளை அவர்கள் அணிந்தனர். அதேசமயம், சாதாரண மக்கள் வழக்கம்போல சாதாரண ஆடைகளை அணிந்தனர். கிராமப்புற மிகச்சிறதளவே துணிகளை பயன்படுத்தினர். ஒரே துணியை பயன்படுத்துகிறவர்களும், கோவணம் அணிந்தவர்களும் பெரும்பான்மையாக இருந்தனர்.

mugal ladyகி.பி.7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளில் ரஜபுத்திரர்கள் என்ற புதிய சத்திரிய சமூகம் உருவானது. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் புதிய பாரம்பரியமான நடைமுறையைக் கடைப்பிடித்தனர். ஆளும் வர்க்கத்தினர் நீண்ட மேலங்கியும், பைஜாமா மாதிரியான உள்ளாடையும் அணிந்தனர். தலையில் அலங்காரத் தலைப்பாகையும், விதவிதமான நகைகளையும் அணிந்தனர். ஷெர்வானி போன்ற உடையும் அப்போது புழக்கத்தில் இருந்தது. வேட்டியை பெரும்பகுதியினர் உடுத்தினர். பாலைவனப் பகுதியில் தேவதா ஸ்டைலிலும், மற்ற பகுதிகளில் டிலாங்கி ஸ்டைலிலும் உடுத்தினார்கள்.

பெண்கள் ரஜபுத்திரர்கள் காலத்து ஓவியங்களை பார்க்கும்போது மெல்லிய உடைகளை மிகவும் லாவகமாக உடலைச்ச சுற்றி அணிந்திருப்பதை பார்க்கலாம். பாவாடை சட்டையை அணிந்து மேலே ஒரு துணியை போர்த்தும் பழக்கம் இருந்தது. தலையையும் முகத்தையும் மறைக்கும் வகையில் மெல்லிய துணியை போர்த்தியிருந்தனர். மிக வித்தியாசமான முகத்தையே மறைக்கும் அளவுக்கான நகைகளை பயன்படுத்தினார்கள்.

கி.பி.15 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பியர்கள் பருத்தி ஆடை ரகசியத்தை தங்கள்நாடுகளுக்கு கொண்டு சென்றனர். பிரிட்டிஷார் இந்தியாவை ஆக்கிரமித்த பிறகு,இங்கிருந்து குறைந்த விலையில்  பருத்தியை விலைக்கு வாங்கி தங்கள் நாட்டுக்குஏற்றுமதி செய்தனர்.

17ஆம் நூற்றாண்டின் இறுதியில், நூற்பு எந்திரங்களும் நெசவு எந்திரங்களும்அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டன. ஐரோப்பாவில் தொழில்புரட்சிதொடங்கியது. இந்தியாவில் இருந்து குறைந்த விலைக்கு பருத்தியை வாங்கிதரமான பருத்தி ஆடைகளை இந்தியாவுக்கே கொண்டு வந்து அதிக விலைக்குவிற்றனர். இந்தியாவின் பருத்தி ஆடை உற்பத்தி நலிவடைந்தது.

ஒரு கட்டத்தில் இந்திய பருத்தியை பிரிட்டிஷார் புறக்கணித்தனர். அமெரிக்ககுடியேற்ற நாடுகளில் கூலியில்லாமல் வேலை செய்த கருப்பர்களால் தரமானபருத்தி உற்பத்தி செய்யப்பட்டது. அந்த பருத்தியை பிரிட்டிஷாரும்ஐரோப்பியர்களும் வாங்கத் தொடங்கினர். மொத்தத்தில் இந்தியாவின் பருத்திஉற்பத்தி பாதிக்கப்பட்டது. ஆடை உற்பத்திக்கு தொடக்க காலத்தில் மூன்றுவகையான இழைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன.

பிரிட்டிஷார் வரவுக்குப் பிறகு இந்தியர்கள் உடை அணியும் பழக்கமும் மாறத்தொடங்கியது. இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கு முற்றிலும் பொருந்தாத கோட், சூட் அணிவதில் மேல்தட்டு மக்கள் ஆர்வமாக இருந்தனர்.

துணி உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கத் தொடங்கியது. நவீன கல்வி அறிவு இந்திய மக்களின் அறிவுக் கண்களைத் திறந்தது. கண்டுகொள்ளப்படாமல் கிடந்த கிராமங்களும் வெளியுலகப் பார்வைக்கு வந்தன. ராஜாக்கள், ஜமீன்தார்கள் காலம் போய் நவீன ஆட்சிமுறை, மேற்கத்திய கலாச்சாரம் இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உடை என்பது மனிதர்களின் வசதிக்கானது என்ற சிந்தனை வளரத்தொடங்கியது. இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் உடைகள் விற்பனையை அதிகரிப்பதற்காக விதவிதமான உடைகளை வடிவமைத்தனர். திரைப்படங்கள், தொலைக்காட்சி விளம்பரங்களும் மக்களுடைய உடைத்தேர்வுக்கு புதிய வழிகாட்டியாக மாறத்தொடங்கின.

இந்தியாவில் மட்டுமல்ல, ஒவ்வொரு பிரதேசத்திலும் வளர்ச்சியடைந்த நாகரிகத்திற்கு தகுந்தபடி உடை வடிவமைப்புகள் இருந்தன. உலகம் முழுவதும் ஒரே   மாதிரியான உடைகள் அணியப்படவில்லை என்பதை வரலாறு தெளிவுபடுத்துகிறது.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் முன்னரே புராதன மேற்கத்திய உலகத்தில்   எகிப்து,   மெசபடோமியா, பெர்சியா, கிரெட்டே, கிரீஸ், ரோம் ஆகிய பகுதிகளில்வளர்ச்சியடைந்த நாகரிகம் உருவெடுத்திருந்தது. இந்த பகுதிகல் அனைத்தும்மத்திய தரைகடல் பகுதியை சுற்றியிருந்தன.

(இன்னும் வரும்)

அடுத்த பகுதி:

எகிப்திய அடிமைகளுக்கு உடையில்லை! உடையின் கதை #6

முந்தைய பகுதி:

சீனப் பட்டும், சில்க் ரோடும்!!! உடையின் கதை #4 

Next Story

மார்பகங்களை மறைக்காத மினோவன் மேலாடை! உடையின் கதை #8

Published on 04/09/2018 | Edited on 04/09/2018

மத்திய தரைக்கடலில் உள்ள தீவுகளில் ஐந்தாவது பெரிய தீவு கிரெட்டே. கிரீஸ் நாட்டிற்கு உட்பட்ட இந்த தீவில்தான் ஐரோப்பாவின் முதல் நாகரிகம் தோன்றியது.

இதை ஏஜியன் கலாச்சாரம் என்றுகூட சொல்வார்கள். கீரீஸ் தீபகற்பத்தின் கீழ் உள்ள இந்த கடல் மத்திய தரைக்கடலின் ஒரு பகுதிதான். இந்தக் கடலில் உள்ள தீவுகளிலும், கடலை ஒட்டிய நாடுகளிலும் உருவான நாகரிகங்களில் முதன்மையானது மினோவன் நாகரிகம். மைசீனிய நாகரிகம் என்றும் சொல்வார்கள்.

கிரெட்டே தீவில் கி.மு.6000ம் ஆண்டுகளிலேயே மக்கள் வசித்தனர். இந்தத் தீவுதான் ஐரோப்பிய கலாச்சாரத்தின் தொட்டில் எனப்படுகிறது. இந்தத் தீவில் குடியேறியவர்கள் அனடோலியா, வடக்கு ஆப்பிரிக்கா, சிரியா, பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என கருதப்படுகிறது.

udaiyin kathai

கி.மு.2500 வாக்கில் கிரெட்டே நாகரிகம் உருவாகத் தொடங்கியது. மத்தியத் தரைகடல் நாடுகளைச் சேர்ந்த மக்கள் மத்தியக்கிழக்கு நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். கிரெட்டே மக்கள் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களாலும் ஈர்க்கப்பட்டனர். அவர்கள், தங்களுக்கென்று தனித்துவம் மிக்க ஒரு சமுதாயத்தையும், உடை வடிவமைப்பையும் உருவாக்கினர்.

கி.மு.1750 முதல் 1400 வரையிலான ஆண்டுகள் இந்த நாகரிகத்தின் முக்கியமான ஆண்டுகள். இந்த காலகட்டத்தில் மிகப் பிரமாண்டமான அரண்மனைகளை இவர்கள் கட்டினார்கள். நோஸோஸ் என்ற அரண்மனை வளாகம் கலைநயமிக்கது. இந்த அரண்மனையில் இடம்பெற்றுள்ள சுவர் ஓவியங்கள், வண்ணம் தீட்டப்பட்ட பாத்திரங்கள், பளிங்கில் செய்யப்பட்ட சிலைகள், டெர்ரகோட்டா, வண்ணம் தீட்டப்பட்ட செராமிக்ஸ் என பிரமிக்க வைக்கிறது இவர்களது நாகரிகம். தெரா தீவில் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்ட மினோவன் நகரில் முழுமையான சுவரோவியம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தீவு கி.மு.1500களில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பில் பெருமளவு அழிந்துபோனது. அந்தத் தீவில் இப்போதும் அகழ்வாராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.

udaiyin kathai

கிரெட்டே மக்கள் பயன்படுத்திய உடைகள் தெளிவான வண்ணங்களுடன், நேர்த்தியாக, நுணுக்கங்களுடன் இருந்தன. பாரம்பரிய கீரிஸ் வழக்கத்தைப் போல இல்லாமல், பெண்கள் உடை கொண்டாடும் வகையில் இருந்தன. பெண்கள் ஆண்களுடன் அன்றாட சமூக நிகழ்வுகளில் சரிசமமாக நட்த்தப்பட்டனர். குடும்பப் பின்னணி பார்த்து தரம் இறக்கப்படவில்லை. ஆண்களின் உடை வடிவங்கள் சிலதான். கம்பளி, தோல், லினென் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட இடுப்பாடைதான் ஆண்களுக்கு உரியதாக இருந்தது. அந்த இடுப்பு உடை, ஒரு பெல்ட்டால் கட்டப்பட்டு அலங்காரமான குட்டைப் பாவாடைபோல அணிந்தார்கள்.

கி.மு.1750 ஆம் ஆண்டுகளில் பெண்கள் நீளமான மணி வடிவ பாவாடையை அணிந்தனர். மார்புப் பகுதியில் தொளதொள ஜாக்கெட்டை அணிந்தனர். அந்த ஜாக்கெட் மார்கங்களை மறைக்காதபடி வடிவமைக்கப்பட்டிருந்தது. பின்னர் வந்த காலங்களில் ஜாக்கெட்டின் இருபக்கத்தையும் இணைக்கும் வகையில் நூலிழைப் பின்னல்கள் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய உடைகள் பெண் சாமியார்கள், கடவுளர்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டன.

கிரெட்டே மக்கள் பளிச்சென்ற வண்ணங்களை விரும்பினார்கள். அவர்களுடைய உடைகள் பின்னல் வேலைகளையும், அலங்கார வேலைகளையும் கொண்டிருந்தன. ஆணும் பெண்ணும் நீளமான கூந்தலை வளர்த்தனர். கூந்தலையும் நகைகள், முத்துக்கள், ரிப்பன்களைக் கொண்டு அலங்கரித்தனர். கிரெட்டே மக்கள் அடிக்கடி குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள். குளித்தபிறகு எண்ணெய் கொண்டு உடலைப் பூசுவார்கள். ஆண்கள் பளிச்சென்று ஷேவ் செய்துகொண்டார்கள். வெளியில் போகும்போது ஆண்களும் பெண்களும் செருப்பு அல்லது ஷூ அணிந்தனர். குளிர்காலத்தில் முழங்கால் வரையான நீளமான ஷூக்களை அணிந்தார்கள். தோள்பட்டையில் குட்டையான கம்பளி ஆடையை போர்த்தி ஊசிகளால் இறுக்கமாக இணைத்திருந்தனர்.

udaiyin kathai

கி.மு.1400 வாக்கில் மினோவன் நாகரிகம் சிதையத் தொடங்கியதுமு, பெலப்போன்னீஸில் புதிய நாகரிகம் உருவாகியது. கடல்பகுதி நாடுகளின் பழக்கப்படியே இந்த நாகரிகம் அமைந்திருந்தது. அந்த நாகரிகத்திலும் உடைகள் மினோவன் நாகரிகத்தில் பயன்படு்ததியதைப் போலவே இருந்தன. ஆனால், அதைக்காட்டிலும் ஆடம்பரமானதாக அமைந்திருந்தன.

கிரெட்டே நாகரிகத்தின் தொடர்ச்சியாக புராதன கிரேக்க நாகரிகத்தையும் பார்த்துவிடலாம். இந்த நாகரிகத்தை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். கி.மு.500 ஆம் ஆண்டு வரையிலான காலத்தை தொன்மையான காலம் என்கிறார்கள். கிரீஸ் தீவு, அனடோலியா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகியவற்றிலும், கிரேக்கத் தீபகற்பத்திலும் பல்வேறு நாகரிகங்கள் உருவாகி இருந்தன. இந்த நாகரிகங்களின் கலைகளும், உடைகளும்  ஒன்றின் மீது மறொன்று செல்வாக்கு செலுத்தும் வகையில் இருந்தன.

கிரீஸின் டோரி என்ற மாவட்டத்தைச் சேர்ந்த டோரியர்கள் கி.மு.1200 வாக்கில் மினோவன் முடியாட்சி நடந்த கிரெட்டே தீவையும், பெலப்போனிஸையும் படையெடுத்து வெற்றிகொண்டனர். இவர்கள் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள். மினோவர்களைக் காட்டிலும் குறைவான முன்னேற்றம் கண்ட சமூகத்தினர். உடை பற்றிய அவர்களுடைய நவீன அறிவு நேர்த்தியற்றதாக இருந்தது. ஆனால், அவர்களுடைய உடை எளிமையாக இருந்தது.  உள்ளூர் செம்மறி ஆடுகளில் இருந்து பெறப்பட்ட கம்பளியால் செய்யப்பட்ட ஆடையை அணிந்தார்கள். கம்பளி ஆடையை சதுரமாக வெட்டி, தோள்பட்டையிலும், உடலைச் சுற்றிலும் ஊசிகளால் குத்தி அணிந்தனர். அனடோலியாவில் குளிர்காலத்துக்கு ஏற்றபடி அணியும் உடைகளைப் பார்த்து, தலையில் கூம்புவடிவ தொப்பிகளையும், காலுறைகளையும் அணிந்தனர்.  

டோரியர்களைத் தொடர்ந்து, கிரேக்கத்தின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த லோனியர்கள் லோனியா மொழியை பேசினார்கள். அனடோலியாவில்  டோரியர்கள் குடியேறியதைத் தொடர்ந்து, லோனியர்கள் மேற்கு அனடோலியாவுக்கு குடியேறினார்கள். அவர்கள் அட்டிகா உள்ளிட்ட மத்திய கிரேக்க பகுதிகளில் இருந்த வெளியேறியது அகாயியன் முடியாட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

லோனியர்களின் நெசவு தொழில் உயர்தரமானதாக இருந்தது. கம்பளி மற்றும் லினெனில் இருந்து லேசான உடைகளை நெய்தனர். கி.மு.8 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் மத்தியப் பிரதேச நாடுகள் இடையே விரிவான வர்த்தகத்தை ஏற்படுத்தினார்கள். மேற்கே கவ்ல் பிரதேசத்திலிருந்து கிழக்கே லிபியா வரை அவர்களுடைய வர்த்தகம் பரவியிருந்தது.

udaiyin kathai

கி.மு.5 மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகளில் எளிமையான, உயர்தர நுணுக்கங்களோடு அருமையான தரத்தில் உடைகள் தயாரிக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் கிரேக்க இலக்கியம், கட்டடக்கலை, சிற்பவேலைகள் சிறந்திருந்தன. உடைகள் விஷயத்திலும் தரம் மிகுந்திருந்தது. விதவிதமான வடிவமைப்புகள் சுவரோவியங்களில் கிடைக்கின்றன.

பாரம்பரிய கிரேக்க உடைகள் போர்த்தும் வகையிலும், கொஞ்சமாய் தைக்கும் வகையிலும் இருந்தன. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியான உடைகளே இருந்தன. ஆனால், உடலைச் சுற்றி போர்த்தி அணியும் விதம் மாறியிருக்கும். அழகிய ரிப்பன்கள், ஊசிகள் கொண்டு அந்த உடையை இணைத்தனர்.

அந்த உடைகள் மொத்தமாக இயற்கையானவை. இந்த உடையை அணிபவர்கள் அதை நுணுக்கத்தோடு கையாண்டனர்…

முந்தைய பகுதி:

மெஸபடோமியருக்கு கம்பளிதான் எல்லாம்!!! உடையின் கதை #7

Next Story

மார்பகங்களை மறைக்காத மினோவன் மேலாடை! உடையின் கதை #8

Published on 04/08/2018 | Edited on 04/08/2018