Skip to main content

ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல்; இந்தியா முன்னேற்றம்..!!!

Published on 30/01/2019 | Edited on 31/01/2019

 

ggffgfg

 

உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. அதன்படி 2018 ஆம் ஆண்டில் ஊழல் மிகுந்த 180 நாடுகளின் பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்தப்பட்டியலில் இந்தியா கடந்த 2017 ஆம் ஆண்டை விட 3 இடங்கள் முன்னேறி 78வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் 81 ஆவது இடத்தில் இந்தியா இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அண்டை நாடுகளான சீனா, 87 வது இடத்திலும், பாகிஸ்தான் கடந்த ஆண்டு இருந்த அதே 117 வது இடத்திலும் உள்ளது. மேலும் ஊழல் மிகுந்த ஆசிய நாடுகளை பொறுத்தவரையில் மாலத்தீவு 31வது இடத்திலும், பாகிஸ்தான் 33வது இடத்திலும், இந்தியா 41வது இடத்திலும், மலேசியா 47 வது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சார் பதிவாளர் வீட்டில் புதைக்கப்பட்ட பணம்; லட்சக்கணக்கில் தோண்டி எடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
13 lakhs in cash, documents were seized from house of subRegistrar

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று இரவு வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இரவு 7.30 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை நடைபெற்ற திடீர் சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தத் திடீர் சோதனையின் போது வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் உள்ளே பணத்தோடு இருந்ததும் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் காட்பாடி சார் பதிவாளர் (பொறுப்பு) நித்தியானந்தத்துக்கு சொந்தமான திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் உள்ள வீட்டில் காலை முதல் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்ட நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாத 13 லட்சத்து 97 ஆயிரம் ரொக்கப்பணம், 80 சவரன் தங்க நகைகள் தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதில் 12 லட்சம் ரூபாய் ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீட்டுக்கு பின்புறம் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேலூரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

13 lakhs in cash, documents were seized from house of subRegistrar

மேலும் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில், காட்பாடி வட்டத்துக்கு உட்பட்ட சுமார் 200 ஏக்கர் அரசு நிலத்தை பத்திர பதிவு செய்ய முயன்றதாக 262 முறையற்ற பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Next Story

சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை; சிக்கிய கரன்சி!

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
anti-bribery department conducted a surprise raid at the Registrar's office

வேலூர் மாவட்டம் காட்பாடியில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் நிலம் விற்பது, வாங்குவது, பாகப்பிரிவினை ஆகியவற்றுக்கு பத்திரப்பதிவுகள், திருமண பதிவு என தினந்தோறும் பத்திரபதிவுகள் நடைபெற்று வருகிறது. காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தின் சார் பதிவாளராக (பொறுப்பு) நித்தியானந்தம் பணிபுரிந்து வருகிறார்.

இங்கு பத்திரப்பதிவு செய்ய அதிக லஞ்ச பணம் வசூலிப்பதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று (19.06.2024) மாலை 6 மணிக்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீரென காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து உள்ளே இருக்கும் ஊழியர்கள், அதிகாரிகள், பத்திர பதிவு செய்ய வந்தவர்கள் அனைவரும் வெளியே செல்ல விடாமல் கதவு சாத்தப்பட்டது. மேலும் வெளியில் இருந்து யாரும் உள்ளே வரக்கூடாது என்பதற்காக வெளியில் இருந்த கேட் மூடப்பட்டது. உள்ளே வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை DSP சங்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவினர்  சோதனை செய்து அங்கிருந்த அதிகாரி  மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று இரண்டாவது நாளாக பலத்த மழை பெய்ததால் காட்பாடி பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் சோதனைக்கு சென்ற போலீசார் அவதி அடைந்தனர். பின்னர் மீண்டும் மின்விளக்கு வசதி வந்தவுடன் சோதனை தொடர்ந்தனர். இந்த சோதனையை கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தியது காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.