Skip to main content

ஆன்லைன் ஷாப்பிங்கில் சிறந்த பொருட்களை எளிமையாக தேர்ந்தெடுக்க கூகுளின் புதிய சேவை

Published on 14/12/2018 | Edited on 14/12/2018

 

gog

 

ஆன்லைன் ஷாப்பிங் என்பது தற்பொழுது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவருகிறது. இன்றைய இளைஞர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க பெரும்பாலும் நாடுவது ஆன்லைன் ஷாப்பிங் தளங்களையே. அப்படி இந்தியாவில் பிரபலமாக உள்ளவை அமேசான், பிளிப்கார்ட், ஈ பே போன்றவை. ஆனால் இதில் சிறந்த பொருளை குறைந்த விலைக்கு விற்பவர் யார் என்பதை கண்டறிவது கடினமான வேலையாகும். தற்பொழுது இந்த பிரச்சனையை தீர்க்க கூகுள் ஒரு புதிய தீர்வை தந்துள்ளது. 
 

அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களையும் ஒப்பிட்டு சிறந்த பொருட்களை குறைந்த விலையில் தருபவர் யார் என்ற முடிவுகளை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள 'கூகுள் ஷாப்பிங்' சேவை நமக்கு தருகிறது. மேலும் இதில் தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ள பொருட்கள் எவை என்பதையும் நாம் கண்டறிய முடியும். ஆன்லைன் ஷாப்பிங்கை எளிமையாக்கும் விதமாக கூகுள் இந்த சேவையை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் இது ஆஃப்லைன் முறைக்கும் அறிமுகப்படுத்தப்படும் என கூகுள் அறிவித்துள்ளது.   

 

 

சார்ந்த செய்திகள்