Skip to main content

‘+12 துணைத் தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு...’ - வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Important Notice Released of +12 Supplementary Exam Aspirants

தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி காலை 09.30 மணிக்கு வெளியாகி இருந்தது. தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்தனர். 

தொடர்ந்து இந்தப் பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான உடனடி மறுதேர்வு தொடர்பான அட்டவணை மே 7ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத் தேர்வுக்கு வரும் மே 16ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்றும், தனித்தேர்வர்கள் மாவட்ட சேவை மையங்களுக்கு சென்றும் விண்ணப்பிக்கலாம். காலை 11:00 மணி முதல் மாலை 5 மணி வரை அவரவர் படித்த பள்ளிக்குச் சென்று மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுகள்  இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், +2 துணைத் தேர்வு ஹால் டிக்கெட்டை இன்று (19-06-24) பதிவிறக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது, ‘பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதுபவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். செய்முறை தேர்வு தேதி குறித்த விவரத்தை முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிய வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

+12 மறுகூட்டல்; மதிப்பெண் பட்டியல் வெளியீடு!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
scorecard release on +12th recap

தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (06.05.2024) காலை 09.30 மணிக்கு வெளியாகி இருந்தது. தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்தனர். 

+12 பொதுத்தேர்வில் எழுதிய மாணவர்கள், மதிப்பெண்ணில் மறுகூட்டல் வேண்டி விண்ணப்பம் செய்திருந்தனர். இந்த நிலையில், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.inஇல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. 

Next Story

பொதுத் தேர்வில் தமிழில் 100 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கவனத்திற்கு; தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
Tamil Nadu Government Important Announcement on students who scored 100 percent marks in Tamil in public examination

தமிழ்நாட்டில்  2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் முடிவுகள் சில தினங்களுக்கு முன் வெளியாகின. இதில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த நிலையில், 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல. அவை பெருமையின் அடையாளம் என்பதைத் தொடர்ந்து பறைசாற்றும் விதமாக இந்தக் கல்வியாண்டின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் அமைந்துள்ளன. தமிழ்நாடு முழுவதிலும், இந்த ஆண்டு மார்ச்-ஏப்ரலில் நடைபெற்ற, மேல்நிலைப் பள்ளிகளுக்கான அரசுப் பொதுத் தேர்வுகளில் 12ஆம் வகுப்பில் 94.56 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுப் புதிய சாதனைப் படைத்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் மட்டும் 91.02 சதவீதம் மாணவ மாணவியர் தேர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள 397 அரசு மேல்நிலைப் பள்ளிகள் இந்த ஆண்டில் 100 சதவீதத் தேர்ச்சி விழுக்காட்டை எய்தி மாபெரும் சாதனைப் படைத்துள்ளன. மேலும், தமிழ்ப் பாடத்தில் மட்டும் 35 மாணவ மாணவியர் 100 சதவீத மதிப்பெண்களைப் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோல உயர்நிலைப் பள்ளிகளுக்கான 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் மாநிலம் முழுவதும் 91.55 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சிபெற்று மாபெரும் சாதனைப் படைத்துள்ளனர். இதில், அரசுப் பள்ளிகளில் மட்டும் 87.90 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள 1,364 அரசு உயர்நிலைப் பள்ளிகள் இந்த ஆண்டில் 100 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுச் சிறந்துள்ளன. தமிழ்ப் பாடத்தில் மட்டும் 8 மாணவ மாணவியர் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1,364 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 397 அரசு மேல்நிலைப் பள்ளிகளும் என மொத்தம், 1,761 பள்ளிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் இவ்வாண்டில் 100 சதவீதத் தேர்ச்சிகள் பெற்றுள்ளன. பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் இது ஒரு மகத்தான சாதனையாகும்.

இத்தனை வெற்றிகளுக்கும் காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக் கல்வி வளர்ச்சியில், கொண்டுள்ள பேரார்வமும் அக்கறையுமே ஆகும். குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ மாணவியரின் முன்னேற்றத்திற்காகப் பள்ளிக் கல்வித் துறையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், பேராசிரியர் க.அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம், மாபெரும் தமிழ்க் கனவுத் திட்டம், 7.5 சதவீத இட ஒதுக்கீடுகளால் கல்லூரிகளில் சேரும் மாணவ மாணவியரின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் திட்டம்.

முதலான பல்வேறு மாணவர் மையத் திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாகச் செயல்படுத்தி வெற்றிகள் படைத்து வருகிறது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7.5 சதவீத இட ஒதுக்கீடுகளால் கடந்த ஆண்டில் கல்லூரிகளில் சேர்ந்துள்ள 28,601 அரசுப் பள்ளி மாணவியரின் கல்விக் கட்டணங்களை பாராட்டியுள்ளார் என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, இந்த ஆண்டின் அரசுப் பொதுத் தேர்வுகளில் 100 சதவீதத் தேர்ச்சிகள் கண்டு சாதனைப் படைத்துள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும், தமிழ்ப் பாடத்தில் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவ மாணவியர் அனைவரையும் சென்னைக்கு அழைத்துப் பாராட்டும் வகையில் சீர்மீகு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் விரைவில் நடத்தப்படவுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.