Skip to main content

தேசிய தேர்வு முகமையை மேம்படுத்தக் குழு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Committee to improve the National testin Agency

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதே சமயம் யுஜிசி நெட் ஜூன் 2024 தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. நெட் தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் எனத் தேசிய சைபர் கிரைமில் இருந்து யூஜிசிக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த இரு தேர்வுகளையும் நடத்தி வருவது தேசிய தேர்வு முகமை ஆகும்.

இந்நிலையில் வெளிப்படையான, சுமூகமான மற்றும் நியாயமான தேர்வுகளை நடத்துவதை உறுதி செய்வதற்காக மத்திய கல்வி அமைச்சகம் உயர்மட்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. தேர்வு செயல்முறையின் சீர்திருத்தம், தரவு பாதுகாப்பு நெறிமுறைகளில் முன்னேற்றம் மற்றும் தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு ஆகியவை குறித்த பரிந்துரைகளை இந்த குழு 2 மாதங்களுக்குள் கல்வி அமைச்சகத்திடம் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மட்டக் குழுவின் தலைவராக இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஐஐடி பேராசிரியர் ராமமூர்த்தி உள்ளிட்ட 7 உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

என்.டி.ஏ வளாகத்தில் நுழைந்த மாணவர் அமைப்பு; தடியடி நடத்திய போலீசார்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Student body entering NDA campus; Police batoned

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதிய ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

தொடர்ந்து நீட் முறைகேடுகளை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை வளாகத்தில் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்தில் காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் இன்று காலை முதலே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் அதிகப்படியான மாணவர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் தடுப்புகளை வைத்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு போலீசார் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர். உள்ளே புகுந்த போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த தடியடி நடத்தப்பட்டது. இது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளது. நீட் முறைகேட்டை எதிர்த்துப் போராடிய காங்கிரஸ் மாணவர் அமைப்பு மீது தடியடி நடத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

Next Story

நீட் முறைகேடு; இருவர் கைது

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
NEET malpractice; Two arrested in Patna

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

நீட்டிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் 300 கோடி ரூபாயை இலக்காக வைத்து நீட் மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டது தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருந்தது. நீட் வினாத்தாள்களைத் தேர்வு மையங்களுக்குக் கொண்டு செல்ல போக்குவரத்து ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள் உதவியுடன் வினாத்தாள்கள் திருடப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில் நீட் முறைகேடு தொடர்பாக பாட்னாவில் இரண்டு பேரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிபிஐ வெளியிட்டுள்ள தகவலின் படி  மனிஷ் பிரகாஷ் மற்றும் அசுதோஷ் ஆகிய இருவர் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.