Skip to main content

விஜய் உத்தரவை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம்; தலைமைக்கு ஏற்பட்ட கோவம்!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
 Vijay birthday function issue

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உத்தரவை மீறி அவரது பிறந்தநாளை கொண்டாடிய போது சாகசத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு, தீ பற்றவைத்தவர்க்கும் கையில் தீ பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. காவல்துறை அனுமதியில்லாமல் நிகழ்ச்சி நடைபெற்றதால் தகவல் அறிந்த போலீசார் மண்டபத்தில் குவிந்ததால் பரபரப்பு. 

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் நலத்திட்ட உதவிகள், சிறுவனின் சாகசம், அன்னதானம், கோயில் சிறப்பு அர்ச்சனை என பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க வெகு விமர்சையாக கொண்டாடினர். இந்த நிலையில் சிறுவனின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது சிறுவன் கையில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு ஓடு உடைக்கும் சாகத்தை செய்தார். அப்பொழுது சிறுவனின் கையில் தீ பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது. 

தீ விபத்தை பார்த்ததும் தீ பற்றவைத்தவர் சிறுவனின் கையில் வைத்திருந்த தீயை அணைக்க முயன்றபோது கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை மூடாமல் கையில் வைத்திருந்த நிலையில் கேனில் இருந்த பெட்ரோல் தீப்பற்றி எறிந்த சிறுவனின் கையில் ஊறியதும் தீ அதிகமாக பற்றி எரிய தொடங்கியது. சிறுவன் மீது பற்றி எறிந்த நிலையில் தீ பற்ற வைத்தவர் கை மீதும் தீ பற்றி எரிந்து ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. 

இதில் காயமடைந்த சிறுவனை அவரது பெற்றோர்கள் நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.தமிழகத்தில் கள்ளச்சாராயம் விவகாரத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட வேண்டாம் என்று அறிக்கை மூலம் உத்தரவு இட்டார். 

கட்சியின் தலைவர் உத்தரவை மீறி சென்னை புறநகர் மாவட்ட தலைவர் ஈசிஆர் சரவணன் நடத்திய நிகழ்ச்சியில் சிறுவனுக்கு தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் மத்தியில் பெரும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் தெரிவித்தனர்.
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்-ஓட்டுநரால் தப்பிய பயணிகள்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Omni bus catches fire - passengers luckily escape

சென்னை கோயம்பேட்டில் இருந்து கோவை செல்லும் தனியார் ஆம்னி பஸ் நேற்று இரவு  சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை  ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை ஓட்டுநர் கார்த்திகேயன் இயக்கிய நிலையில், பயணிகளில் சிலர் ஆங்காங்கே அவர்களுக்கு தேவையான இடங்களில் இறங்கினர்.

இந்நிலையில் சுமார் 15 பயணிகளுடன் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பஸ் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது, பஸ்சின் முன் பகுதி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் கார்த்திகேயன், பஸ்சை உடனடியாக சாலையோரமாக நிறுத்தியதோடு, உள்ளே இருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக வெளியேற்றியுள்ளார். 

ஓட்டுநரின் இந்த துரித நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், பஸ் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார், தீயணைப்புத் துறை வீரர்கள் உதவியுடன் பஸ்சில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்ததோடு, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

“பல வருடங்கள் கழித்து சந்திப்பு” - ரம்பா நெகிழ்ச்சி

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
vijay rambha recent clicks

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வந்தவர் ரம்பா. 2010 ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட இவர், கனடாவில் உள்ள டொரண்டோ நகருக்கு குடி பெயர்ந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தையும் இருக்கிறது. 

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார் ரம்பா. ஆனால் சமீபகாலமாக லைம் லைட்டில் இருந்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் விஜய்யுடன் சந்தித்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார் ரம்பா. தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் விஜய்யை சந்திதிருந்த நிலையில் அந்த புகைப்படங்களை பகிர்ந்து, “பல வருடங்கள் கழித்து உங்களை சந்தித்தது மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

vijay rambha recent clicks

விஜய் மற்றும் ரம்பா இருவரும் நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்தச் சூழலில் விஜய்யுடன் ரம்பா எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.