Skip to main content

கள்ளச்சாராய மரணம்; பாதிக்கப்பட்டவர்களை துரை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் (படங்கள்)

Published on 22/06/2024 | Edited on 22/06/2024

 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளக்குறிச்சி சம்பவம்; உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
nn

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழப்பு 64 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சாராயம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த மகேஷ் (40) என்பவர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு  64 ஆக அதிகரித்துள்ளது.

Next Story

கள்ளச்சாராய வழக்கு குற்றவாளி காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓட்டம்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
illicit liquor case accused flees from police station

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 63 பேர் உயிரிழந்த நிலையில் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

அந்த வகையில் சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேஷசமுத்திரம் பகுதியில் சாராய வியாபாரியான மணிகண்டன் என்பவரை காவல் நிலையத்திற்கு போலிசார் அழைத்து வந்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் காவல் நிலையத்திலிருந்து மணிகண்டன் தப்பியுள்ளார். தப்பி ஓடிய மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.