!['' Without the BJP, there would be no Tamil Nadu politics '' - L. Murugan speech!](http://image.nakkheeran.in/cdn/farfuture/IpUcqFvUtlZCf0g1qsRb1v7MmCWEGOpKWWtoDMlJJNc/1610030047/sites/default/files/2021-01/trututu65.jpg)
!['' Without the BJP, there would be no Tamil Nadu politics '' - L. Murugan speech!](http://image.nakkheeran.in/cdn/farfuture/JC_tQDGKzsB0PwFrJKg5AZcjwwyDCC2YWjcMq_OpUHg/1610030047/sites/default/files/2021-01/tyuit8678.jpg)
!['' Without the BJP, there would be no Tamil Nadu politics '' - L. Murugan speech!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Si2-UuKjprwclVzMD5nKtq9CxyZjxz9htq-a1bXAEsM/1610030047/sites/default/files/2021-01/gfujtyuty.jpg)
Published on 07/01/2021 | Edited on 08/01/2021
மத்தியச் சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் தொகுதியில் இருந்து, மாற்றுக் கட்சியினர் 1,000 பேர் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
மாற்றுக் கட்சியினர் இணைவதற்காக பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது மேடையில் பேசிய பாஜக தமிழகத் தலைவர் எல்.முருகன், ''தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்கிறார்கள். பாஜக இல்லையெனில் தமிழக அரசியலே இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் கேஸ் இணைப்புக்காக எம்.பியின் பரிந்துரை கடிதம் பெற, காத்திருக்க வேண்டும். ஆனால், பாஜக ஆட்சிக் காலத்தில், சமையல் கேஸ் இணைப்பு இலவசமாகவே வழங்கப்படுகிறது'' என்றார்.