Skip to main content

தள்ளிப்போகும் பொறியியல் கலந்தாய்வு?

Published on 08/08/2022 | Edited on 08/08/2022

 

engineering consultation may Postpone

 

நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

தமிழகத்தில் இந்தக் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 19ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமானதால் ஜூலை 27ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், ஆகஸ்ட் 16 முதல் கலந்தாய்வைத் தொடங்க உயர்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது.

 

இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் கலந்தாய்வை தொடங்க உயர்கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொறியியல் படிப்புக்கான பொதுக் கலந்தாய்வு இன்று தொடக்கம்

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

general couselling for engineering course starts today
கோப்புப்படம்

 

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

 

தமிழ்நாட்டில் உள்ள 430 பொறியியல் கல்லூரிகளில் 2023 - 2024 ஆம் கல்வியாண்டில்  ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 காலி இடங்கள் உள்ளன. இந்த காலி இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. ஏற்கனவே இதற்கான தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு குறித்த புதிய அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி, சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 22 தொடங்கி செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

 

அந்த வகையில், கடந்த 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தின் வாரிசுகள், தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது.

 

இந்நிலையில் இன்று பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 3 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அந்த வகையில் இன்று முதல் ஆகஸ்ட் 9 வரை முதல் கட்ட பொதுக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றம்; அமைச்சர் அறிவிப்பு

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

Change of engineering consultation date; Ministerial Notification

 

தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு ஏற்கனவே அறிவித்ததை விட ஒரு மாதத்திற்கு முன் தொடங்க இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

 

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2/08/2023ல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த அந்த கவுன்சிலிங் 2/07/2023ல் இருந்து துவங்கப்படுகிறது. அதில் சிறப்பு இட ஒதுக்கீடு 2 ஆம் தேதியில் இருந்து 5 ஆம் தேதி வரையிலும் பொது கலந்தாய்வு 7/7/2023 ஆம் தேதியில் இருந்து 24/08/2023 வரையிலும் நடைபெறும். துணைக் கலந்தாய்வு 26/8/2023ல் இருந்து 29/08/23 வரை நடைபெறும்.

 

எஸ்.சி.ஏ, எஸ்.சி. கவுன்சிலிங் 1/09/2023ல் இருந்து 2/9/2023 ஆம் தேதி வரை நடைபெறும். இவை அனைத்தும் முடிந்த பின் முதலாமாண்டு பொறியியல் படிப்பு 3/09/2023 அன்று துவங்கப்படும்” என்றார். முன்னதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து பேசிய அமைச்சர் பொன்முடி, இக்கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மேலும் 3 தினங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளில் நடப்பாண்டு முதல் ஆண்டுக்கு ரூ.200 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்பட இருக்கிறது. பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நாளை முதல் தொடங்க இருக்கிறது” என்றார்.