Skip to main content

உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியால் வீணாகும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

சூயஸ் நிறுவனத்திற்கு கோவை மாநகரின் தண்ணீரை விற்ற எஸ்.பி. வேலுமணி, சென்னை நெமிலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டதையும் சூயஸ் நிறுவனத்திற்கு தாரை வார்க்க முயற்சித்ததை ஆவணங்களோடு வெளிப்படுத்தியிருந்தோம். இந்நிலையில் சென்னை நெமிலியை பற்றி மேலும் கிடைத்துள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது. எந்த நிலையிலும் தமிழகத்தின் தண்ணீரை விற்காமல் ஓய்வதில்லை என்று முடிவெடித்து உள்ளது தெரிகிறது.

 

sp velumani


கடந்த மாதம் டெண்டர் படிவம் பிரித்த போது  முதலில் கன்சல்டன்சி நிறுவனத்தின்  மறு டெண்டர் கோரிக்கையை ஏற்காத சென்னை பெருநகர குடிநீர் நிறுவனம் அதே கன்சல்டன்சி நிறுவனத்தின் அறிக்கைகளை சுட்டிகாட்டி IDE &  VA TEC நிறுவனங்களை தகுதி நீக்கம் செய்து மற்ற மூன்று நிறுவனங்களின் ஒப்பந்த புள்ளியை மட்டும் திறக்கிறது. அதில் குறைந்த அளவு டெண்டர் கொண்ட அசேனியா நிறுவனம் ரூ. 1500.83 கோடி, கோப்ரா டெக்டரான் நிறுவனம் ரூ.1691 கோடி, சூயஸ் நிறுவனம் ரூ. 2327.25 கோடி என விலை கேட்பு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் முதல் ஏலதாரருக்கும் இராண்டாம் ஏலதாரருக்கும் உள்ள வித்தியாசம் ஏறத்தாழ ரூ. 191 கோடிகள்  இரண்டாம் ஏலதாரருக்கும் மூன்றாம் ஏலதாரருக்கும் வித்தியாசம் ரூ. 600 கோடி. 



இவ்வளவு பெரிய விலை மாற்றங்கள்  நிகழ ஒற்றை காரணம், ஊழல் மட்டுமே. வேலுமணியின் திட்டம் முழுவதுமாக இந்த டெண்டர் திறந்தவுடன் தோல்வியடைந்தது. காரணம் ரூ. 1500.83 கோடிக்கு கேட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்த பணிகளை தருவதை தவிர வேறு வழியில்லை. ஆனால் அமைச்சர் தரப்பு மிரட்டலால், அசேனியா நிறுவனம், டாலர் உயர்வு மற்றும் கால தாமதத்தால் மூலப் பொருட்கள் விலை ஏற்றம் போன்ற காரணங்களை காட்டி டெண்டரில் இருந்து பின்வாங்குகிறது. இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி அமைச்சர் தரப்பு காய் நகர்த்த தொடங்குகிறது. ஏற்கனவே ஊழல் வழக்குகளில் சிக்கிய கோப்ராடெக் நிறுவனம்  சி.பி.ஐ விசாரணையில் உள்ள நிறுவனத்திற்கு டெண்டர் வழங்க கூடாது, தள்ளுபடி செய்யவேண்டும என்று வழக்குகளை காட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கினை சூயஸ் நிறுவனம் தொடங்கியது. 

 

டெண்டர் விதி முறைகளின் படி வருடத்திற்கு ரூ. 800 கோடிகள் வரவு செலவுகள் உடைய நிறுவனங்கள் மட்டுமே இந்த டெண்டரில் பங்கெடுக்க முடியும். ஆனால், கோப்ரா டெக் நிறுவனத்தின் வருடத்தின மொத்த வரவு செலவே ரூ. 300 கோடிகள்தான். ஆனால், பிற நிறுவனங்களை இணைத்து வருடத்தின் வரவு செலவாக ரூ. 800 கோடிகளை காட்டுகிறது. எனவே அடிப்படையிலேயே தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கன்சல்டண்ட நிறுவனம் தனது அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது. 

        

தற்போது, சென்னை உயர் நீதிமன்றம் சூயஸ் நிறுவனத்தின் வழக்கில்  சென்னை பெருநகர குடிநீர் வாரியம் முடிவினை எடுத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதனையடுத்த முதல் ஏலதாரர் குறிப்பிட்ட தொகையான ரூ. 1500.83 கோடிகள். ஆனால், இரண்டாம் ஏலதாரரான கோப்ராடெக் தெரிவித்துள்ள தொகையுடன் முதல் ஏலதாரரின் ஏலதொகையை ஒப்பிட்டும்போது அது ரூ. 191 கோடி அதிகம். எனவே ஒப்பந்த புள்ளிகள் சட்டத்தின்படி ஒரு மெட்ரோ வாட்டர் நிறுவனம் இரண்டாவது ஏலதாரரை அழைத்து முதல் ஏலதாரரின் தொகையில் செயல்பட வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும். அதன் பின்னர் பேச்சுவார்த்தைகள் நடத்தி ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து பணிகளை வழங்க வேண்டும்.  ஆனால், கோப்ரா டெக் நிறுவனம் 28.3.2018 அன்று ஒரு இணையதளம்  மூலமாக எங்களால் ரூ. 1691 கோடி ரூபாய்க்கு குறைவாக இந்த பணிகளை செய்யமுடியாது என்று ஒரு கடிதத்தை அனுப்புகிறார்கள். சர்வதேச டெண்டர்களில் இது மிகப்பெரிய சட்டவிதி மீறல். 
 


இந்த ஒரு காரணத்திற்காகவே இந்த நிறுவனம் கட்டாயமாக தகுதி இழப்பு செய்ய வேண்டும். ஆனால், கோப்ரா டெக் நிறுவனத்தின் உரிமையாளர் பங்குதாரராக இருக்கும் சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபல ஸ்டார் ஓட்டலில் சென்னை பெறுநகர குடிநீர் வாரியத்தின் இயக்குநர், நிதிச்செயலாளர், சகிதமாக ஒரு பெரிய சந்திப்பு நடத்தி அதில் தேவையான அதிகாரிகளுக்கும் கிடைக்க வேண்டியதை உறுதி செய்தவுடன்  எந்த ஒரு சட்ட ரீதியான பேச்சுவார்த்தை மற்றும் நடவடிகையும் இல்லாமல், மெட்ரோ வாட்டர் நிறுவனம் கோப்ராடெக் குறிப்பிட்ட விலையான ரூ. 1691 கோடிகளுக்கு  டெண்டரை கொடுத்திருப்பதன் மூலம் ரூ. 191 கோடி ரூபாயை அரசு நேரடியாக இழக்கிறது. 


இது  தவிர 20% டெண்டர் சட்டத்தை பயன்படுத்தி மேலும் ரூ. 330 கோடிகள் அதிகமாக கோப்ராடெக் நிறுவனத்திற்கு தருவாதாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்ததாக தகவல்கள் வருகிறது. அப்படி பார்த்தால் ரூ. 521 கோடி ரூபாய் அளவிற்கு மிகப்பெரிய ஊழல் நடப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

 

sp velumani

 

ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த டெண்டரை இரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும். புதிய நிறுவனங்கள் பங்கெடுக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கான கன்சல்டிங் நிறுவனமே மறு டெண்டர் கோருங்கள் என்று அறிவித்தும் வேலுமணியின் பேராசையால் ஒட்டுமொத்தமாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் வீணாக போகிறது. கடல் நீரை முழுமையாக சுத்திகரித்து முறையாக வழங்காவிட்டால் பொதுமக்களுக்கு சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு போன்ற நீண்ட கால பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துக்கள் இருக்கிறது. ஏற்கனவே பல்வேறு ஊழல்களை செய்த ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்த பணிகளை வழங்கினால் ஏற்படும் விளைவுகளால் இந்த திட்டமே வீணாகிவிடும் என்று ஆதங்கம் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இந்த டெண்டரை இரத்து செய்யாமல் ஓய மாட்டோம் என மார்க்சிச்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சிவா

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தே.மு.தி.க. - அ.தி.மு.க. கூட்டணி உறுதி?” - எஸ்.பி. வேலுமணி சூசகம்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
DMDK - ADMK Alliance sure Sp Velumani 

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகமும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கடந்த 7 ஆம் தேதி (07.02.2024) காலை 10 மணியளவில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தே.மு.தி.க. தனித்து போட்டியிட வேண்டும் என பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

மாவட்டச் செயலாளர்களில் ஒரு தரப்பினர் பா.ஜ.க.வுடனும் மற்றொரு தரப்பினரோ அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடனே தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும். எனவே யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தரும் கட்சியுடன் தான் தே.மு.தி.க. கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் மாவட்டச் செயலாளர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதுவரை கூட்டணி குறித்து யாருடனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.பி. அன்பழகன், பெஞ்சமின் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான எல்.கே. சுதிஷ், பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னர் அ.தி.மு.க. நிர்வாகிகள், மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

DMDK - ADMK Alliance sure Sp Velumani 

இந்த சந்திப்பிற்கு பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணையின்படி, தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். கூட்டணி குறித்து விவாதிக்க அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே இரு தரப்பிலும் குழு அமைக்கப்படும். இதன் பின்னர் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள், ‘கூட்டணி உறுதி என எடுத்துக் கொள்ளலாமா?’ என கேள்வி எழுப்பினர். அதற்கு எஸ்.பி. வேலுமணி, “நேரடியாக வந்து சந்தித்து பேசியதை வைத்தே புரிந்து கொள்ளுங்கள்” என சூசகமாகப் பதிலளித்தார். இந்த பரபரப்பான அரசியல் சூழலில் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட பிப்ரவரி 21 முதல் மார்ச் 1 வரை விருப்ப மனுக்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி அ.தி.மு.க.வில் விருப்ப மனுக்களை பெறுவதற்கான கால அவகாசம் மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

கிளாம்பாக்கம் நடைமேம்பாலம்; டெண்டர் வெளியீடு

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Publication of tender on kilambakkam footbridge

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் எனப் பெயரிடப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி திறந்து வைத்தார். இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) நேற்று (30-01-24) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது. பயணிகளின் வசதிக்காக தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் போது விழுப்புரம் கோட்ட பேருந்துகள் மட்டும் தாம்பரம் வரை இயக்கப்படும். 

அதே சமயம் மீண்டும் தென்மாவட்டங்களுக்கு கிளம்பும் அரசுப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே புறப்படும் எனவும் போக்குவரத்துத் துறை தெரிவித்திருந்தது. மேலும் சென்னையில் இருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாகவும், பூவிருந்தவல்லி வழியாக வேலூர், திருப்பத்தூர், ஓசூர் வரை செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகம் முழுவதும் செல்லும் அரசு பேருந்துகளுக்கான நடைமேடை எண்களை நேற்று (30-01-24) அறிவித்தன.

இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்க டெண்டர் வெளியிட்டுள்ளது. அதில், பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் மையப்பகுதிக்கு 400 கி.மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்படவுள்ளது. மேலும், நகரும் படிக்கட்டிகள் மற்றும் மின் தூக்கி வசதியுடன் இந்த நடைபாதை அமைக்கப்படவுள்ளது. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ளவுள்ளது. இதற்கான டெண்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. டெண்டருக்கு பிப்ரவரி 14ஆம் தேதி கடைசி நாள் ஆகும் என்று தெரிவித்துள்ளது.