Skip to main content

பதவி ஆசை காட்டி திருமாவளவன் காலை நக்கியது ஏன்? எச்.ராஜாவுக்கு வி.சி.க. மா.செ. கேள்வி

Published on 12/12/2018 | Edited on 12/12/2018
h.raja



திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் தொட மாட்டார்கள் என்று தெரிந்து வைத்துள்ள பாஜக, எதற்காக அவரை எப்படியாவது தொட்டுவிட வேண்டும் என துடித்தது? எதற்காக தொடக்கூடாத திருமாவளவனுக்கு பதவி ஆசை காட்டி அவரது காலை நக்கியது? என எச்.ராஜாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் ந.செல்லதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

 

நிதானமிழந்த சனாதனம்! வெற்றிப்பாதையில்_ஜனநாயகம்! என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

"திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் தொட மாட்டார்கள்" என்று பாஜக எச்.ராசா பேசியிருப்பது, மிகவும் மலிவான, தரம் தாழ்ந்த, ஜனநாயக விரோத, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய பேச்சு.
 

 

எச்.ராசாவின் இந்த கீழ்த்தரமான பேச்சை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. ஜனநாயகத்தை மதிக்காமல், மனுவின் கோட்பாட்டை மதித்து செயல்படும் சமூகவிரோதியான எச்.ராசாவை, தமிழகத்தின் எந்த மாவட்டங்களிலும் சுதந்திரமாக நடமாட விடமாட்டோம். ஜனநாயக ரீதியில் எங்களின் அனைத்து விதமான எதிர்ப்புகளையும் வெளிப்படுத்துவோம். 

 

ஆதிக்க புத்தி கொண்ட எச்.ராசாவால், எங்கள் தலைவரின் வளர்ச்சியையும், அவரது உறுதியான சனாதன எதிர்ப்பையும், மதவாத சக்திகளோடு சமரசம் செய்து கொள்ளாத  அவரது நிலைப்பாட்டையும், தமிழகத்தில் சாதிவெறி சக்திகளை தனிமைப்படுத்தி, வெகுஜன மக்களின் ஆதரவைப் பெற்று நம்பிக்கை நாயகனாக பரிமாணம் பெற்று வருவதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரால் இதை தடுக்க முடியாத நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் தன்னுடைய நிதானத்தை இழந்து, இப்படி வாய்க்கு வந்தபடி பேசுகிறார். 

    

கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக எங்கள் தலைவரை, பாஜக தங்களின் பக்கம் இழுத்துக் கொள்ள எத்தனை முயற்சிகள் எடுத்தது என்றும், தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்த பிறகும் கூட, தமிழக பாஜகவைச் சார்ந்த மத்திய அமைச்சர் மூலம் தொடர்ந்து நடைபெற்ற பகீரத முயற்சிகள் பற்றியும் இந்த எச். ராசாவுக்கு எப்படி தெரியாமல் போனது? 

  

திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் தொட மாட்டார்கள் என்று தெரிந்து வைத்துள்ள பாஜக, எதற்காக அவரை எப்படியாவது தொட்டுவிட வேண்டும் என துடித்தது? எதற்காக தொடக்கூடாத திருமாவளவனுக்கு பதவி ஆசை காட்டி அவரது காலை நக்கியது? எதற்காக அழையா விருந்தாளியாக அசோக் நகருக்கு வந்து பொன்னாடை போர்த்தி பல்லை இளித்தது? அப்போது கூட பக்குவமாக பதில் சொல்லி புன்னகையுடன் வழியனுப்பி வைத்தார் திருமாவளவன். 

       

எழுச்சித்தமிழர் மிகச்சிறந்த பண்பாளர். எச்.ராசா போல இழிபிறவி அல்ல. பாஜக தொட்டுவிடத் துடித்தது திருமாவளவனை. ஆனால் அவர் பாஜகவைத் தொடவில்லை. அதுதான் நிஜம். பாஜகவின் பாசிச கைகளுக்கு எட்டவில்லை என்றவுடன் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று பேசும் எச்.ராசாவே நினைத்தாலும் தொட முடியாத உயரத்தில் இருப்பவர் திருமாவளவன். 

 

எந்தக் காலத்திலும் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர் அவர். சனாதன சக்திகளின் சதிகளை முறியடித்து புரட்சிகர ஜனநாயகத்தை வென்றெடுக்க சபதம் ஏற்றுள்ள மக்கள் தலைவர். எச்.ராசா நிதானத்தை இழந்து நிற்பதில் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் பாஜக எனும் மதவாத சக்தி மக்கள் மன்றத்தில் தோல்வியைத் தழுவி வருகிறது. 

 

தோற்பவன் நிதானத்தை இழப்பது நியாயம் தான். ஆனால் எழுச்சித்தமிழர் தனது பண்பட்ட நடவடிக்கைகளாலும் உயர்வான கொள்கைகளாலும் மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்று வருகிறார். நாளைய தலைமுறையை வழிநடத்த தகுதியான தலைவராக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறார். எனவே வெற்றிப் பாதையில் பயணிக்கும் எழுச்சித்தமிழர் நிதானம் இழக்க மாட்டார். அவரோடு பயணிக்கும் கொள்கைப்புரிதல் உள்ள அவரது தம்பிகள் நாங்களும் நிதானத்தை இழக்க மாட்டோம். 

 

ஆனால் ஜனநாயக விரோத, சமூகவிரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிற எச்.ராசாவை ஜனநாயகம் அனுமதிக்கிற அனைத்து விதமான எதிர்ப்புகளின்  மூலமும் நிலைகுலையச் செய்வோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்போம். ஆதிக்த்தை வேரறுப்போம். சமத்துவத்தை நிலைநாட்டுவோம். எழுச்சித்தமிழர் வழிநடப்போம்.   இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.