
வினோத் இயக்கத்தில் வெங்கட் நாராயண தயாரிப்பில் விஜய் நடித்து வரும் படம் ஜனநாயகன். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பிரபல நடிகர் பட்டாளம் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
கடந்த அக்டோபர் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முன்னதாக டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்தது. அரசியல் கதைகளத்தில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இப்படம் 2025 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் தள்ளிப் போகவுள்ளதாக ஒரு தகவல் இருந்து கொண்டு இருக்கிறது.
முழு நேர அரசியலுக்கு முன் விஜய்யின் கடைசி படமாகச் சொல்லப்படும் நிலையில் அவர் விடைகொடுக்கும் வகையில் இப்படத்தில் ஒரு பாடல் இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதில் விஜய்யை வைத்து சமீபகாலமாகப் படங்கள் இயக்கி தற்போது முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் அட்லீ, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.