Skip to main content

திருமணம் செய்ய விரும்பாத பெண் எடுத்த விபரீத முடிவு!

Published on 15/03/2025 | Edited on 15/03/2025

 

 bizarre decision made by a woman who didn't want to get married

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த மாளவிகா அபிராமபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். 38 வயதாகும் மாளவிகாவிற்கு அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர். ஆனால் மாளவிகாவிற்கோ திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லையாம். ஆனாலும் விடாமல் அவரது பெற்றோர் மாளவிகாவிற்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதில் மும்முரமாக செயல்பட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில்  ஆசிரியர் மாளவிகா வழக்கம் போல் நேற்று கால நடைப்பயிற்சி சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அதன்பிறகு தான் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 9வது மாடிக்கு சென்று மாளவிகா கீழே குதித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாளவிகா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணம் செய்ய விருப்பம் இல்லாததன் காரணமாக  மாளவிகா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது, வேறு எதாவது காரணமாக  தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்