Skip to main content

'ஜனவரி 11 வரை திரையரங்குகள் 50% இருக்கைகளுடன்தான் இயங்க வேண்டும்'- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

Published on 08/01/2021 | Edited on 08/01/2021

 

tamilnadu theatres 100% seats madurai high court bench order

 

ஜனவரி 11-ஆம் தேதி வரை திரையரங்குகள் 50% இருக்கைகளுடன்தான் இயங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100% இருக்கைகளுடன் இயங்கலாம் என்ற தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கவும், அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று முத்துக்குமார், ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர். 

 

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அமர்வு முன் இன்று (08/01/2021) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'ஜனவரி 11-ஆம் தேதி வரை 50% இருக்கைகளுடன்தான் திரையரங்குகள் இயங்க வேண்டும். கரோனா காலத்தில் பொருளாதார சிக்கல்களுக்கு அதி முக்கியத்துவம் அளிக்க இயலாது. 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கும் சூழலில், திரையரங்குகளில் காட்சிகளை அதிகப்படுத்துவது பற்றி தகவல் தேவை. 100% இருக்கை விவகாரத்தை தமிழக அரசு சரியான முறையில் பரிசீலித்து முடிவெடுக்கும் என நம்புகிறோம்' என கூறிய நீதிபதிகள், திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி தொடர்பாக தமிழக அரசிடம் விரிவான விளக்கம் பெற்றுக் கூற தலைமை வழக்கறிஞருக்கு ஆணையிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 11- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  

 

சார்ந்த செய்திகள்