Skip to main content

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளால் கண்பாதிப்பு வருமா?- அறிக்கை அளிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020


 

schools students attend online class eye problem chennai high court

 

பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதை முறைப்படுத்த விதிகள் வகுப்பது குறித்து ஜூலை 6- ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கும் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

 

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பு கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் மூலம் வகுப்புக்களில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது, ஆபாச இணையத்தளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால், அந்த இணையத்தளங்களை, மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை, ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர், உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

 

இதேபோல, ஆன்லைன் வகுப்புகளை மொபைல் மூலமும், லேப் டாப் மூலமும் பார்ப்பதால், மாணவர்களின் கண்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 1- ஆம் வகுப்பு முதல் 5- ஆம் வகுப்பு வரை ஆன் லைன் வகுப்புகள் நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும், 6- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்புக்கள் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும்  கோரி, விமல் மோகன் என்பவரும் வழக்குத் தொடர்ந்திருந்தார். 

 

இந்த வழக்கில் மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், ஆன்லைன் வகுப்புக்களுக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த விதிகளும் வகுக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

 

மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்துவதற்கு விதிகள் வகுப்பது தொடர்பாக, உள்துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கருத்துகளைப் பெற்று தெரிவிக்க, இரண்டு வார கால அவகாசம் வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

 

http://onelink.to/nknapp

 

அதேபோல, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மாணவர்களின் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க, ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் சி.முனுசாமி கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை கோரிய அனைத்து வழக்குகளையும், ஜூலை 6- ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வாரச் சந்தையால் போக்குவரத்து பாதிப்பு; பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதி

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
students and public are suffering due to impact of traffic due to weekly market

ராணிப்பேட்டை மாவட்டத்திலேயே மிகப்பெரிய சந்தையாக விளங்கும் ராணிப்பேட்டை வாரச்சந்தையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தை வியாபாரம் நடைபெறுவது வழக்கம். இந்தச் சந்தை மைதானத்தில் கடந்த ஓராண்டு காலமாக புணரமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சந்தையில் போதிய இடவசதி இல்லாததால் சந்தையின் உள் புறத்திலும் வெளிப்புறத்திலும் கூட்டம் அலைமோதுகிறது. நாள் முழுவதும் இந்த நிலை நீடிப்பதால் இந்தச் சாலையில் ஒவ்வொரு வாரமும் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கடந்த இரண்டு மாதமாக ஒவ்வொரு வாரமும் நெரிசல் இருந்தாலும் மக்கள் சகித்துக்கொண்டனர். இந்த வாரம் மக்களிடம் இது கோபத்தை உருவாக்கியுள்ளது. காரணம், இந்த வாரம் திங்கள்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டுவிட்டது. மாணவ - மாணவிகள் பள்ளிக்கும், கல்லூரிக்கும் நேரத்தோடு செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் வாரச் சந்தையால் போக்குவரத்து பாதிப்பால் மாணவ - மாணவிகள் அதில் சிக்கிக்கொண்டனர்.

இதன் காரணமாக பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்வோர் எனப் பலரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடுமையாக அவதி அடைந்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வாரச்சந்தை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், கட்டுமானம் முடியும் வரை காவல்துறை போக்குவரத்து பிரச்சனையைச் சரிசெய்ய வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

‘பாலியல் தொல்லையால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை...’ - நீதிமன்றம் வேதனை

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
court anguish incident affects not only the women concerned

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மோகன கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய பெண்ணுக்கு, மோகன கிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாக விசாகா கமிட்டியில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அங்கு நடைபெற்ற விசாரணையில் மோகன கிருஷ்ணன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மோகன கிருஷ்ணன் மீது வழக்கு பதிவுசெய்து போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், தன் மீதான பாலியல் புகாரை எதிர்த்து மோகன கிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி கூறியதாவது, ‘பணியிடங்களில் பாலியல் தொல்லையால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. இந்தச் சம்பவங்கள் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பணியிடங்களில் பாலியல் தொல்லை நெறிபிறண்ட செயல் மட்டுமல்லாமல், மறைமுக சமூக பிரச்சனையாகவும் உள்ளது. பணியிடத்தில் பெண்களுக்கான அதிகாரத்தை மட்டுப்படுத்துவதுடன் மன, உடல் ரீதியாகவும் பெண்களைப் பாதிக்கிறது’ எனத் தெரிவித்தார். மேலும், மோகனகிருஷ்ணன் தரப்பு சாட்சியை விசாரணை செய்யவில்லை என்பதால் மீண்டும் விசாரித்து அறிக்கை தர வேண்டும் என நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார்.