Skip to main content

அருந்ததியர் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா திமுக தலைமை?

Published on 19/09/2022 | Edited on 20/09/2022

 

dmk

 

திமுக 15 வது உட்கட்சி தேர்தல் அறிவித்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பதவி அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

ஏனென்றால் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அருந்ததியர்கள் அதிகமாக வசிக்கும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிகளில் ஒதுக்கப்பட்ட தனி வார்டுகளில் ஒரு அருந்ததியருக்கு கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது அருந்ததியர் மக்களிடம் பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்தில் அருந்ததியர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய வார்டில் கூட மற்றொரு சமூகத்திற்கு வழங்கப்பட்டது என மன வேதனையுடன் கூறுகின்றனர் அருந்ததியர் இனத்தை சார்ந்த உடன்பிறப்புகள்.

 

அவர்களது மன குமுறலுக்கு ஆறுதல் தரும் விதத்தில் கோவை மாநகர் மாவட்ட துணை செயலாளர் பதவி அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. இதன் வெளிப்பாடாக கோவை பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடந்த மாற்று கட்சியினர் இணைப்பு விழாவின் போது மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வரும் கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் திப்பம்பட்டி ஆறுச்சாமியை நேரில் அழைத்து ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

 

இதே வேளையில் கோவை மாவட்ட திமுகவில் தங்கள் சமூக மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை  தர வேண்டுமென அருந்ததியர் சமூக மக்கள் தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விக்கிரவாண்டி தொகுதியை தக்க வைத்தது திமுக!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
DMK retained Vikravandi constituency

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். அதோடு 11 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேட்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்திலிருந்தனர். அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்திருந்தது.

இந்தத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் சூழலில் ஜூலை 10 ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. சரியாகக் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. திமுக வேட்பாளர் 1,23,195 வாக்குகள் பெற்றுள்ளார்.  பாமக வேட்பாளர் அன்புமணி 55,026 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 10,470 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில், கிட்டத்தட்ட 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றிப்பெற்றுள்ளார். இதன்மூலம் திமுக விக்கிரவாண்டி தொகுதியை தக்கவைத்துள்ளாது. நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட அபிநயா டெப்பாசிட்டை இழந்துள்ளார். 

Next Story

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
Minister Durai Murugan suddenly fell ill

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் தொடக்கத்திலிருந்தே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்துவருகிறார்.  மதியம் 12 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் 69,855 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.  பாமக வேட்பாளர் அன்புமணி 30,421 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 5,566 வாக்குகளும் பெற்றுள்ளார்.

கிட்டத்தட்ட விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் அறிவாலயம் வந்த முதல்வர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.  இந்த நிலையில் முதல்வருடன் வந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.