
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவர்கள் தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் வைரலான நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்து நிறுத்தத்தில் கூட்டமாக இருதரப்புகளாக மோதிக்கொண்டனர். அங்கிருந்தவர்கள் மாணவர்கள் மோதலை வீடியோவாக பதிவு செய்தனர். இந்த காட்சிகள் வைரலான நிலையில் சங்கராபுரம் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர். அப்போது தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
அதில் சில மாணவர்களை பிடித்த போலீசார், அவர்களிடம் விசாரித்ததில் செல்ஃபி எடுப்பதில் ஏற்பட்ட தகராறு மாணவர்களுடைய மோதல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர். செல்ஃபி எடுப்பதில் தகராறு என்ற சில்லி பிரச்சனைக்காக ஏற்பட்ட பள்ளி மாணவர்களின் மோதல் தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.