பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீரென மாற்றம் செய்யப்பட்டு தற்போது பள்ளிக்கல்வித்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மொத்தம் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுதேர்வு வைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். நேற்று முன்தினம் 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் இளைஞர் நலத்துறை செயலாளராக இருந்த தீரஜ் குமார் புதிய பள்ளிக்கல்வித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கைத்தறி, கைவினைப்பொருட்கள், ஜவுளி மற்றும் கதர்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்துக்குதுறை செயலாளராக தர்மேந்திர பிரதாப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் பிற்படுத்தப்பட்டோர், எம்.பி.சி மற்றும் சிறுபான்மை நலத்துறை செயலாளராக சந்திரமோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.