Published on 22/04/2023 | Edited on 22/04/2023

அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவின் அலுவல் சாரா உறுப்பினராக எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவின் (சிண்டிகேட் குழு) அலுவல் சாரா உறுப்பினராகப் பதவி வகித்து வந்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவின் அலுவல் சாரா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் இந்த பொறுப்புக்கு எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பரந்தாமன் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஒருவர் தான் அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவின் அலுவல் சாரா உறுப்பினராகப் பதவி வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.