![Rescued workers! Young people celebrated with fireworks!](http://image.nakkheeran.in/cdn/farfuture/-nLzsGDDtbozvoOOOBvjxUr42Sf9zUVWE_6sWEObsOA/1701232643/sites/default/files/2023-11/th-2_3.jpg)
![Rescued workers! Young people celebrated with fireworks!](http://image.nakkheeran.in/cdn/farfuture/uoD8KESR9TrAmmzpogU_iCdDDS-UUgbEceDjE8wGUyw/1701232643/sites/default/files/2023-11/th-1_5.jpg)
![Rescued workers! Young people celebrated with fireworks!](http://image.nakkheeran.in/cdn/farfuture/fYQSqaElcsVbfWANT0YLOPWWxS37TEm5jFXV4FZhGVk/1701232643/sites/default/files/2023-11/th_5.jpg)
உத்ரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்திற்குள் ஏற்பட்ட சரிவில் சிக்கிப் பல நாட்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்க அரசு தீவிர முயற்சிகள் செய்து வல்லுநர்கள் பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்கள் கொண்டு வந்து துளையிட்டபோது மேலும் சரிவு ஏற்பட்டது.
3வது முயற்சியில் துளையிட்டு ஆக்சிஜன், உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் எலி வளை தொழிலாளர்களின் முயற்சியில் குழி தோண்டி சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 பேரையும் மீட்கும் பணி தீவிரமாக இருந்தது. அவர்களின் உதவியுடன் சுரங்கத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டனர்.
இந்த மீட்புக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டிருந்தனர். 41 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதையடுத்து அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே உள்ளூர் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.