தருமபுரி மாவட்டம் பாலகோடு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் ரஜினி மக்கள் மன்ற தருமபுரி மாவட்ட செயலாளாராக உள்ளார். இவர் ஜனவரி 4 ந்தேதி தனது நண்பர்கள் மூன்று பேருடன் சென்னைக்கு சென்றுள்ளார். அங்கு தனது தனிப்பட்ட பணி, மன்ற பணிகளை முடித்துக்கொண்டு இரவு காரில் ஊர் திரும்பி கொண்டு இருந்தார்கள். காரை ஓட்டுனர் வெங்கடேசன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த லஷ்மிபுரம் என்ற இடத்தில் கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது கார் ஓட்டுனர் கட்டுபாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மாவட்ட செயலாளர் மகேந்திரன் உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதிகமாக அடிப்பட்டிருந்த மகேந்திரனை மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கே அவர் டிசம்பர் 5 ந்தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.