
இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு பிறப்பித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வரும் நிலையிலும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது அரசுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இன்று மேலும் 580 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று மட்டும் 316 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கரோனா தொற்றால் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு 37 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கரோனா பாதிப்பில் இருந்து 31 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.