மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்தும், ஊரடங்கை பயன்படுத்தி தொழிலாளர் நல சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்துவதை கண்டித்தும் சிஐடியூ சார்பில் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஒவ்வொரு மையத்திலும் சமூக இடைவெளியோடு, முக கவசம் அணிந்து கோரிக்கை அட்டைகளை பிடித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
பொதுத்துறைகளையெல்லாம் தனியார் மயமாக்குவது, 8 மணி நேர வேலையை 12 மணி நேர வேலையாக மாற்றுவது. பொதுமக்களை பாதிக்கின்ற பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து மத்திய அரசு உயர்த்துவதை நிறுத்திடவும், கலால் வரியை வாபஸ் வாங்கிட கோரியும், இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கிடவும், மின்சார கட்டணத்தை கரோனா காலத்தில் அதிகமாக வசூல் செய்வதை தமிழக அரசு நிறுத்திடவும், பழைய கட்டணத்தை வசூல் செய்திட கோரியும், கரோனா ஊரடங்கு காலத்தில் வருமானவரி வரம்புக்குள் வராத அனைத்து குடும்பங்களுக்கும் ஆறுமாத காலத்திற்கு மாதம் ரூபாய் 7500/- வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், ஆட்டோ, சாலை போக்குவரத்து, தையல் தொழிலாளர்கள், விசைத்தறி, கைத்தறி, கட்டுமானம் மற்றும் பீடி போன்ற முறை சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக மாதம் ரூபாய் .7500 /-வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன.