Skip to main content

பிரதமர் மோடி 12ம் தேதி சென்னை வருகை! பாதுகாப்பு பணியில் 5000 போலீசார்!

Published on 08/04/2018 | Edited on 08/04/2018


பிரதமர் மோடி வரும் 12ம் தேதி மாமல்லபுரம் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். அவர் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் வரும் 11ம் தேதி முதல் 14ம்தேதி வரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் ராணுவ கண்காட்சி நடக்கிறது. இதற்காக சுமார் 250 ஏக்கர் பரப்பில் 480 கோடியில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இதில், சர்வதேச ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை கண்காட்சிக்கு வைக்கின்றனர்.

இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி வரும் 12ம் தேதி திறந்து வைக்கிறார். 12ம் தேதி காலை 6.40 மணிக்கு டெல்லியிலிருந்து தனி விமானத்தில் புறப்படுகிறார். காலை 9.20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வரும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. காலை 9.25 மணிக்கு சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் புறப்பட்டு காலை 9.50 மணிக்கு மாமல்லபுரம் வருகிறார். காலை 9.55மணிக்கு ஹெலிபேடிலிருந்து காரில் புறப்படும் அவர் காலை 10 மணிக்கு திருவிடந்தை ராணுவ கண்காட்சி திடலுக்கு வருகிறார். காலை 10 முதல் 12 மணி வரை ராணுவ கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்கிறார்.

பகல் 12.05 மணிக்கு கார் மூலம் ஹெலிபேடு செல்கிறார். பகல் 12.10 மணிக்கு ஹெலிபேடு வருகை தரும் அவர் பகல் 12.15 மணிக்கு ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் புறப்பட்டு செல்கிறார். பகல் 12.40 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் சென்று அங்கிருந்து பகல் 12.45 மணிக்கு கார் மூலம் சென்னை அடையாறு செல்கிறார். பகல் ஒரு மணிக்கு கேன்சர் இன்ஸ்டியூட் வருகை தரும் அவர் பகல் 1 முதல் 2 மணி வரை கேன்சர் இன்ஸ்டியூட் வைர விழா கட்டிடம் திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

பகல் 2.05 மணிக்கு கார் மூலம் சென்னை பழைய விமானநிலையம் செல்கிறார். பகல் 2.25 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு டெல்லி சென்றடைகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம் முதல் ராணுவ கண்காட்சி நடைபெறும் திடல் வரை 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

சார்ந்த செய்திகள்