Published on 28/12/2019 | Edited on 28/12/2019
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு நேற்று முதல்கட்ட தேர்தல் முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்துள்ளது.

158 உள்ளாட்சி ஒன்றியங்களுக்கான இரண்டாம் கட்டதேர்தல் பரப்புரை ஓய்வடைந்துள்ள நிலையில், நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதன்பின்னர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.