Published on 19/11/2018 | Edited on 19/11/2018
![ra](http://image.nakkheeran.in/cdn/farfuture/TVjjWU95_P7rcz7ANC0hrOzOHsi3aXK9dqbHLwxmtCA/1542656146/sites/default/files/inline-images/Rawat%20op.jpg)
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே தமிழகத்தின் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த தொகுதிகளுக்கும், கலைஞர் மறைந்ததால் திருவாரூர் தொகுதிக்கும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மறைவால் திருப்பரங்குன்றத்திற்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை உள்ளது.