கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளராகப் பணி செய்து வந்தவர் ராஜேந்திரன்(45). இவர் கடந்த சனிக்கிழமை சங்கராபுரம் அருகே உள்ள எஸ். வி. பாளையம் கிராமத்தில் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அங்கிருந்து உடனே புறப்பட்டு தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். பிறகு குடும்பத்தினர் உதவியுடன் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சேலம் மருத்துவமனையில் அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ராஜேந்திரன் மரணமடைந்துள்ளார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும் சஞ்சய், கோகுல் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
ராஜேந்திரன் மரணம் காவல்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கான இறுதிச்சடங்கில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் தலைமையில் சக காவல்துறையினர் கலந்து கொண்டு இறுதிஅஞ்சலி செலுத்தினர்.