Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; உடலுறவின் போது உயிரிழந்த பெண் - அத்துமீறிய இளைஞர்கள்!

Published on 16/12/2024 | Edited on 16/12/2024
Youths who forcefully misbehaved with women

திருப்பத்தூர் மாவட்டம் சந்திரபுரம் அடுத்த பொன்னன் வட்டம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் சிவா. இவருக்கு 10 வருடங்களுக்கு முன்பு சந்தியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர் சிவா பெங்களூருக்கு வேலைக்கு சென்றதால், சந்தியா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த  16 ஆம் தேதி  அதே பகுதியைச் சேர்ந்த மகளிர் குழு நடத்தி வரும் மாது என்பவர் சந்தியாவிடம் லோன் பணம் வாங்க வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் நுழைந்து பார்த்தபோது கட்டிலில் சந்தியா பிணமாக கிடைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாது கத்தி கூச்சலிட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் விரைந்து வந்த போலீசார் சந்தியாவின் உடலை மீட்டுத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது சந்தியாவின் தொலைப்பேசி ஆராய்ந்த போது அவருக்கு இரண்டு தொலைப்பேசி எண்ணில் இருந்து அடிக்கடி அழைப்பு வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் குமரேசன் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதில் குமரேசனுக்கும் சந்தியாவுக்கும் இடையே முதலில் 7 வருடங்களாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்தது. இந்த நிலையில் குமரேசன் சிங்கப்பூருக்கு சென்றதன் காரணமாக அதே பகுதியில் சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் சந்தியா திருமணத்தை மீறிய உறவில் வைத்திருந்து வந்ததாகவும், இந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்பு குமரேசன் வெளிநாட்டில் இருந்து மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் சந்தியாவுக்கும் விக்னேஷும் இடையே  இருந்த திருமணத்தை மீறிய உறவு தெரிய வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த சந்தியாவுடன் குமரேசன் தனிமையில் இருக்க வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதனை சந்தியா மறுக்க, அவரது கன்னத்தில் அறைந்தும், கழுத்தை நெரித்தும் வலுக் கட்டாயமாக உடலுறவில் ஈடுபட்டதன் காரணமாக சந்தியா மயக்கி நிலைக்குச் சென்றுள்ளார். அதன் பின்பு அங்கிருந்து குமரேசன் சென்ற நிலையில் குமரேசன் வந்ததை அறிந்த  விக்னேஷும் அவனுடன் மட்டும் உடலுறவில் ஈடுபடுவாயா? என்னுடன் இருக்க மாட்டாயா? என்று கூறி அடித்து துன்புறுத்தி மயக்க நிலையில் இருந்த சந்தியா உடன் உடலுறவில் ஈடுபட்டதால் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார் என்ற திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் இருவரும் தெரிவித்தனர். 

இதன் காரணமாக மயக்க நிலையில் இருந்த சந்தியாவை விடாமல் உடலுறவில் ஈடுபட்ட விக்னேஷையும் அடித்துத் துன்புறுத்தி உடலுறவு ஈடுபட்ட குமரேசனையும் போலீசார் கைது செய்து திருப்பத்தூர் மேஜிஸ்ட்ரேட் முன்பு நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

சார்ந்த செய்திகள்