உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட இருக்கின்ற சூழலில் தற்பொழுது அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் தொடங்கியது.
மாவட்ட தலைமை அதிமுக அலுவலகங்களில் இன்று விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் விருப்பமனுக்களை பெற்று பூர்த்தி செய்து நாளை மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். மாநகராட்சி மேயர் பதவிக்கு 25,000 ரூபாயும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 5,000 ரூபாய் விருப்ப மனு கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.