சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் ஜோசப் கென்னடி எழுதிய அங்காய வம்சம், தூக்கத்தை தின்றவர்கள் ஆகிய இரண்டு நாவல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சி சத்யா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மல்லை சத்யா பேசியதாவது “தூக்கத்தை தின்றவர்கள், சென்னையில் தான் பார்த்த பிறரின் மீது தாக்கத்தை உருவாக்கி பேசுபொருளாக இருந்த ஆளுமைகளை தன் கதைமாந்தர்களாக எழுதியுள்ளார் எழுத்தாளர் கண்மணி ஜோசப் கென்னடி. திராவிட இயக்க கருத்தியல் பொதுவுடைமை சித்தாந்தம் தமிழ் தேசியம் என்று களமாடி வருபவர் ஜோசப் கென்னடி. அவர் என் மீது கொண்ட அன்பின் காரணமாக தூக்கத்தைத் நின்றவர்கள் புத்தகத்தை எனக்கு சமர்ப்பித்து உள்ளார்.
அங்காய வம்சம் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் பால் மணம் மாறாத இளம் வயது பெண் பிள்ளை அங்கம்மா புள்ளி மானைப் போன்று பாடித்திரிய வேண்டிய வயதில் குடும்ப உறவுகளின் அழுத்தத்தின் காரணமாக தாய் மாமனுக்கு வாக்கப்பட்டு 20 வயதிற்குள் மூன்று பிள்ளைகளுக்கு தாயாகி கணவன் இறந்து கைம்பெணாகிறாள். விதியை எண்ணி முடங்கி விடாமல் சுயமரியாதை இயக்கத்தின் நீதிக்கட்சிகாரர்கள் பேசும் போது மதராஸ் பட்டினத்தில் வெளிப்படையாக யாரும் சாதி கேட்டு வேறுபடுத்தி பார்ப்பதில்லை என்பது இளம் வயது அங்கம்மாவின் இதயத்தில் ஏதோ ஒன்று செய்ய மதராஸ் பட்டினத்திற்கு இடம் பெயர்கிறார்.
மதராஸ் பட்டினத்தின் நாகரிக வாழ்க்கைத் தொடங்குவதற்கு முன்பு பழவேற்காடு துறைமுகம்தான் வர்த்தக கேந்திரமாகத் திகழ்ந்துள்ளது. பூம்புகார் பட்டினத்திற்கு முன்பு காவிரி கடலில் கலந்த இடம் பழவேற்காடு முகத்துவாரம்தான் இரண்டாவதாக புதுச்சேரி அரியாங்குப்பம் பின்னர்தான் நாகை மாவட்டம் பூம்புகார் ஆகும்.
ஆக வட தமிழ்நாட்டின் நீர் வழி வணிக போக்குவரத்து மையம் பழவேற்காடு அங்கு வாழ்ந்த ஒரு செல்வந்தர் அவர் பெயர் ஏகாம்பரம் பிள்ளை இவரை ஈன்றெடுத்த உடனேயே தாய் இயற்கையைத் தழுவுகிறாள். ஆக தாய் முகம் காணதவர் அவரைச் சுற்றிய குடும்ப வாழ்க்கை அவரின் வணிகத் தொடர்புகள் என்று பழைய மதராஸ் பட்டின வாழ்க்கை முறை மொழி நடை பண்பாடு என்று காணமல் போன பழைய மதராஸ் வரலாற்றை வால்டாக்ஸ் ரோடு மற்றும் கருப்பர் நகரம் உள்ளிட்ட பலவற்றின் பெயர் காரணம் என்று அங்காயா வம்சம் நாவல் பயணித்து வாசகர்களின் மணக் கண்ணில் விரிய வைக்கின்றார்” என்றார்.