Skip to main content

நலிவடைந்த "பேனா நிப்புகள்" தயாரிக்கும் தொழிலாளர்களை கண்டு கொள்ளாத தமிழக அரசு!

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

போருக்குச் செல்லும் வீரர்கள் ஏந்திச்செல்லும் ஆயுதங்களைப் போல, பாடசாலையில் கல்விக்கற்கச் செல்லும் அனைவரும் தங்கள் இதயத்தில் சுமந்துச் செல்வது பேனாவை மட்டுமே. நம் முன்னோர்கள் தங்கள் மனதில் தோன்றும் சிந்தனைகளை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க பயன்படுத்தியதே எழுத்து. ஒரு குடும்பத்தில் ஒருவராவது கல்வி கற்றால் அக்குடும்பமே தலைநிமிர்ந்துச் செல்லும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஒருவர் தான் படித்திருப்பதை அடையாளம் காட்டுவதே அவர் தம் மார்பில் சுமக்கும் இந்த பேனா தான். கிராமப்புறங்களில் படித்த இளைஞர்களை பார்த்துக் கேட்கக்கூடிய முதல் வார்த்தையே "படிச்சப்பய பேனா இல்லாம இருக்கியே பா" என்பது தான்.பல சிறப்புகளைக் கொண்ட இப்பேனா தயாரிப்புக்கு பெயர் பெற்றது தான் விருதுநகர் மாவட்டம்.

 

 

PEN NIPPILE MANUFACTURING EMPLOYEES SUFFER

 

 

குறிப்பாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பிரதான தொழிலாக இருந்த 'பேனா நிப்' உற்பத்தி தற்போது படிப்படியாக அழிந்து வருகின்றது. இங்கு 2000- ஆவது ஆண்டுக்கு முன்பு அரை நூற்றாண்டாக இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டது. பேனா உற்பத்தி செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல முழுகவனத்துடனும், அதிகப்படியான உழைப்பையும் அளிக்க வேண்டும்.15 -நிலைகளை கடந்து தான் பேனா முழு நிலையையே அடையும். ஒவ்வொரு முல்லையும் தனித்தனியாக உற்பத்தி செய்யவேண்டும். இங்கு 300- க்கும் மேற்பட்ட சிறு தொழிற்சாலையையும், அந்த தொழிலை நம்பி 3000 தொழிலாளர்கள் பணியாற்றினர். இப்படியாக 1000-த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை அளித்து வந்த இத்தொழிலை தற்போது பால்பேனாக்கள் வந்து முற்றிலும் தாக்கி. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் போன்ற பல்வேறு இடங்களில் இப்பேனாவை பயன்படுத்தச் செய்தால் இத்தொழில் மேலும் புத்துணர்ச்சி பெரும் என்று பெரும் வருத்தத்துடன் மனம் கலங்குகின்றனர்.

 

 

PEN NIPPILE MANUFACTURING EMPLOYEES SUFFER

 

 

300 க்கும் மேற்பட்ட தொழில்கள் இருந்த இடத்தில் தற்போது 10 -க்கும் குறைவான தொழிற்சாலைகளே உள்ளன. அழிவை நோக்கி சென்ற பல பலமைகள் புத்துயிர் பெற்று வரும் நிலையில் பேனாவும் புத்துணர்ச்சி பெறவேண்டும் என்று தொழிலாளர்கள் விரும்புகின்றனர். மிகப் பழமையான நூல் தொல்காப்பியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, இந்நூலை வடிவமைக்கப் புலவர்கள் பயன்படுத்தியதும் எழுத்தாணியே. மனித இனம் எழுத்தாணியால் எழுத ஆரம்பித்து.பின்பு மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்து இன்று பேனாவால் எழுத ஆரம்பித்துள்ளனர். இது போன்ற பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய இப்பேனா இன்று மறுவி பால்பேனாவாக மாறிவிட்டது. கையெழுத்தே அவர் தலையெழுத்தை மாற்றிவிடும் என்பது பழமொழி . சாதிக்க நினைத்த பலர் இப்பேனாவால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் சென்றுள்ளனர்.

 

 

PEN NIPPILE MANUFACTURING EMPLOYEES SUFFER

 

 

ஆனால் இங்கே பேனாவை உற்பத்தி செய்தவர்கள் எங்கே செல்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் நிற்கின்றான். பழமையில் இருந்து புதுமைக்கும், புதுமையில் இருந்து பழமைக்கும் மாறுவதே மனிதனின் இயல்பு என்பதைப் போல பேனாக்களின் தேவை வருங்காலங்களில் புத்துணர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையில் இத்தொழிலை இன்றும் செய்து வருகின்றனர். இதில் பணியாற்றிய அதிகமான தொழிலாளிகள் வருமையின் உசசம் தாங்காமல் இடம்பெயர்ந்து வேறு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.  பலர்  அடைந்த சாதனைக்கு பேனாக்கள் ஓர் ஆணிவேராக இருந்தது. ஆனால் இன்று பேனா உற்பத்தி செய்வோர்களுக்கு ஆதரவாக இன்று யாரும் இல்லையே என்று நினைத்து வருந்துகின்றனர் பேனா தொழிலாளர்கள்.

"கத்தியின் முனையை விட, பேனாவின் முனைக்கு பலம் அதிகம்"

 

 


பா.விக்னேஷ் பெருமாள்

சார்ந்த செய்திகள்