Published on 03/04/2019 | Edited on 03/04/2019
தலைமை தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுசில் சந்திரா ஆகியோர் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தனித்தனியே தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.
இந்த ஆலோசனையில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார்,பாபு முருகவேல், ஜே.சி.டி பிரபாகர், திமுக சார்பில் ஆர்.எஸ் பாரதி, இளங்கோ, தேமுதிக சார்பில் சந்திரன், பாஜக சார்பில் திருமலைசாமி, காங்கிரஸ் சார்பில் தாமோதரன், கராத்தே தியராஜனும் மற்றும் திரிமுனால் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.