Skip to main content

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு!!- ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் திடீர் அறிவிப்பு!

Published on 30/10/2018 | Edited on 30/10/2018
 Omni bus tariff hike - Omni Bus Owners Association Announcement!

 

ஆம்னி பேருந்து கட்டணம் 20 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆம்னி பேருந்து  உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

 

வார இறுதி நாட்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட 20 சதவிகிதம் ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், டீசல்,பெட்ரோல் விலை உயர்வு காரணமாக கட்டண உயர்வை தடுக்க முடியவில்லை எனவும் ஆம்னி பேருந்து  உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

சார்ந்த செய்திகள்

 

Next Story

கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Additional special buses run!

பௌர்ணமி, மற்றும்  வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “பௌர்ணமி நாளான இன்று (21/06/2024), சனிக்கிழமை (22/06/2024) மற்றும் ஞாயிறு (23/06/2024)  ஆகிய வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (21/06/2024) 600 பேருந்துகளும், நாளை (22/06/2024) 410 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 55 பேருந்துகளும், நாளை 80 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

Additional special buses run!

அதே சமயம் பெங்களூர். திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 30 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று 15 பேருந்துகளும், நாளை 15 பேருந்துகளும் ஆக 30 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பௌர்ணமியை முன்னிட்டு சென்னை மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 30 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

Additional special buses run!

அதோடு ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை வாழ் மூத்தகுடி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
The Transport Corporation has issued an important announcement to the senior citizens of Chennai

சென்னையில் வசிக்கும் மூத்தகுடி மக்களுக்கு கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணம் செய்வதற்கான டோக்கன்கள் பெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் வாழும் மூத்தக்குடி மக்கள் கட்டணம் இல்லாமல் பேருந்து பயணம் மேற்கொள்வதற்காக டோக்கன்கள் வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் வழங்கப்படும். இதற்காக சென்னையில் உள்ள 42 பணி மனைகள், பேருந்து நிலையங்களில் அடையாள அட்டையை மூத்த குடிமக்கள் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் மூத்தகுடி மக்கள் தங்களுடைய இருப்பிட சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்விச் சான்று மற்றும் இரண்டு வண்ண புகைப்படங்கள் ஆகியவற்றை கொடுத்து அடையாள அட்டையைப் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7:30 மணி வரை சென்னையில் உள்ள 42 பணிமனைகளிலும் டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.