![nipha](http://image.nakkheeran.in/cdn/farfuture/LzbKvsLku7cOaTVb4RqvnRuuku1TUCpuX-pYClZ6dZM/1533347666/sites/default/files/inline-images/nipah-virus.jpg)
நிபா வைரஸ் விலங்குகள் மற்றும் மனிதர்களை கடுமையாக தாக்கும் வல்லமையை கொண்டது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில் நிபா வைரஸ் தொடர்பாக தீவிர ஆய்வில் மத்திய அரசு சார்பாக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் பயப்பட வேண்டாம் எனவும் கேரள சுகாதாரதுறை செயலாளர் ராஜீவ் சதானந்தன் கூறியுள்ளார். மேலும் இதே போன்று நிபா வைரஸ் காய்ச்சல் வங்கதேசத்திலும் பரவியதாகவும், அப்போது அதனை அந்நாட்டு அரசு லாவகமாக கையாண்டு, மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றியதையும் ராஜீவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிபா வைரஸ் விலங்குகள் மற்றும் மனிதர்களை தாக்கும் ஒரு நோய் கிருமி என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இது முதன் முதலில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் 1998-1999 ஆம் ஆண்டுகளில் பன்றிகளில் இருந்து மனிதர்களிடம் பரவியது. இதனைத்தொடர்ந்து நிபா வைரஸின் தாக்குதலால் 265 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
எத்தனை பேர் இறந்தனர் என்ற தகவல்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை. இதேபோன்று ஆஸ்திரேலியாவில் இந்த வைரஸ் குதிரையிலிருந்து மனிதர்களுக்கும், சில குறிப்பிட்ட வகை வௌவால்களிலிருந்தும் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நிபா வைரஸின் முக்கியமான அறிகுறிகள் ,லேசான காய்ச்சலுடன் இந்த வைரஸ் பாதிக்கும். பிறகு, மூச்சுவிடுவதில் சிரமம், கடினமான தலைவலி , மயக்கம், சோர்வு, மனக்குழப்பம், கோமா, ஏற்பட்டு அது மூளைக் காய்ச்சலாக மாறும். நிபா வைரசுக்கு என்று தனிப்பட்ட மருந்துகளோ தடுப்பூசிகளோ கிடையாது. ஆனால் இந்த வைரஸை தரமான நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு நடைமுறைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
அதாவது நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பன்றிகளிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்றும், திறந்தவெளி குடிநீரை குடிக்க கூடாது என்றும் மரத்தில் இருந்து கீழே விழும் பழங்களை உண்ண கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை செயளாலர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் நிபா வைரஸ் நோய் பரவவில்லை. நிபா வைரஸ் குறித்த அச்சம் மக்களுக்கு தேவையில்லை. நாங்கள் இந்த பிரச்சனை சூழ்நிலையை தொடர்ந்து கண்கானி்த்து தான் வருகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் இது தொடர்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளிடமும் தெரிவித்து உள்ளோம். இதைப்பற்றிய மக்கள் கவலைபடவேண்டியது இல்லை என்றார்.