அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஒமிக்ரான்பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா?
ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஒமிக்ரான்பரவும் என்று தி.மு.க அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பார்களோ?
இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது; மக்களைப் பற்றி கவலையும் கிடையாது! 'தீயசக்தி கூட்டம்' என்று தெரியாமலா சொன்னார்கள் நம் தலைவர்கள்?" என்று குறிப்பிட்டுள்ளார்.