Skip to main content

 தென்காசி (தனி) பாராளுமன்றம் - கோளரங்கம் எப்படி.?.

Published on 18/03/2019 | Edited on 19/03/2019

 

நெல்லை மாவட்டத்திலிருக்கும் இன்னொரு பகுதியின் பாராளுமன்றத் தொகுதியான தென்காசி பாரளுமன்றம், தென்காசி கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் என்று மாவட்டத்தின் நான்கு சட்டமன்றங்களோடு அருகிலுள்ள விருதுநகர் மாவட்டத்திலிருக்கும் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் என 6 சட்டமன்றங்கள் என்று போகிறது. தென்காசி பாராளுமன்றத்தின் கோச்சாரம்.

 

t

 

தற்போதைய இறுதிவாக்காளர் பட்டியலின் படி. சங்கரன்கோவில் பெண் வாக்காளர்கள், 122962, ஆண் வாக்காளர்கள் 11,7233 மூன்றாம் பாலினத்தவர் 4, வாசுதேவநல்லூர் ஆண் வாக்காளர்கள் 1,12082, பெண் வாக்காளர்கள் 11,4359 மூன்றாம் பாலினம் 12, கடையநல்லூர் வாக்காளர்கள் ஆண் 1,35,874 பெண் வாக்காளர்கள் 1,36443, இதரர் 3 தென்காசி ஆண் வாக்காளர்கள், 134169 பெண் வாக்காளர்கள் 1,37,902 இதரர் 5, ராஜபாளையம் ஆண் வாக்காளர்கள் 1,10941 பெண் வாக்காளர்கள், 1,16190, இதரர் 25, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண் வாக்காளர்கள் 1,14,736 பெண் வாக்காளர்கள் 1,19709 இதரர் 39 பேர்கள் என பாராளுமன்றத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,72670.

 

ad

 

தேசம் சுதந்திரமடைந்த பின் 1957ம் ஆண்டு முதல் 2014 வரை 14 பார்லிமெண்ட் தேர்தல்கள் நடந்துள்ளன. 1957ம் ஆண்டு காங்கிரசின் சங்கரபாண்டியன் வெற்றி பெற்றார். 1962ம் ஆண்டிலும் காங்கிரஸின் சாமி வெற்றி பெற்றார். 1967ல் காங்கிரசின் ஆறுமுகம், 1971ல் காங்கிரசின் செல்லச்சாமி, 1971 முதல் 1991 வரை காங்கிரசின் அருணாசலம் தொடர்ந்து 5 முறையாக வெற்றி பெற்றார். பின்பு 1996ல் காங்கிரஸ் பிளவுபட்டு த.மா.க. என்றான நேரத்தில் அக்கட்சியின் தலைவர் மூப்பனாரின் ஆதரவாளரான அருணாசலம், தி.மு.க. கூட்டணியோடு வென்றார். ஆரம்பகாலம் தொட்டு 10 முறை காங்கிரஸே தென்காசியைத் தக்கவைத்திருந்தது. அதன் பின் தென்காசி தொகுதியை அ.தி.மு.க. கைப்பற்றியது. 2004ல் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அப்பாத்துரை வெற்றி பெற்றார். 2009 அ.தி.மு.க.வின் ஆதரவில் போட்டியிட்ட சி.பி.ஐ.யின் லிங்கம் எம்.பி.யானார் 2014ல் அ.தி.மு.க.வின் வசந்தி முருகேசன் சிட்டிங் எம்.பி.யானார். இது வரையிலும் தி.மு.க. நேரடியாகப் போட்டியிடாமல் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையே களத்தில் நிறுத்தியது.

 

K. Krishnasamy - m.danush kumar

 

தற்போது தி.மு.க., கூட்டணிக் கட்சிகளோடு தனது வேட்பாளரான தனுஷ்குமாரை களமிறக்கியுள்ளது. அடிப்படையில் தி.மு.க. காரர்.

 

தென்காசி பாராளுமன்ற தொகுதியின் மொத்தமுள்ள வாக்காளர்களில் முன்னணி வாக்காளர்கள் தாழ்த்தப்பட்ட, சமூகத்தவர்கள், பி.ஆர். சமூகம், மற்றும் அருந்ததியர் சமூகம் என்று மொத்தம் 2,75849 வாக்காளர்கள், தேவர் சமூகத்தவார்கள் 2,24503 நாடார் சமூக வாக்காளர்கள் 169191 மற்றும் முஸ்லிம், யாதவர், முதலியார் என வாக்காளர்களின் எண்ணிக்கை வரிசைகள் போகின்றன.

 

கடந்த 2014 தேர்தலின் போது தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட புதிய தமிழகத்தின் டாக்டர் கிருஷ்ணசாமி 262,912 வாக்குகள் பெற்று வாய்ப்பை இழந்தவர். எதிர்த்துப் போட்டி யிட்ட அ.தி.மு.க.வின் வசந்தி முருகேசன் 4,24,586 வாக்குகள் பெற்று எம்.பி.யானார் காரணம், காங்கிரஸ், ம.தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரிந்து நின்றதால் வாக்குகள் சிதறின. தி.மு.க.வின் ஆதரவு வேட்பாளர் வாய்பபை இழக்க நேரிட்டது. தற்போது பிரிந்து இந்தக் கட்சிகள் தி.மு.க.வின் கூட்டணியில் வருவதோடு தி.மு.க. நேரடியாகவே பலத்துடன் கோதாவிற்கு வருவது உ.பி.க்களிடையே உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது.

 

Tenkasi

 

போட்டியிலிருக்கிற புதியதமிழகத்தின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, இம்முறை அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி மற்றும் தனது செல்வாக்குடன் மறுபடியும் போட்டியிலிருக்கிறார். அ.தி.மு.க. கூட்டணி தங்களுக்கு கை கொடுக்கும் என்று நம்பிக்கையிலிருக்கிறார்கள் பு.த.கட்சியினர். அதே சமயம், அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியை உருவாக்கிய டி.டி.வி. தினகரன், தனது கட்சி வேட்பாளராக பொன்னுத்தாயை களமிறக்கி களத்தை உஷ்ணமாக்கியுள்ளார்.

 

முன்முனை போட்டி. ஊசிக்கு ஊசி பாயுமா?. யாருக்கு வாய்ப்பு. என்ற எதிர்ப்பார்ப்புகள் பரபரக்கின்றன.

 
 

சார்ந்த செய்திகள்